Sunday, October 26, 2008

மான் ஆட மயில் ஆட- ஆங்கில பாடல் நடனம்- தமிழ் பற்று வாழ்க.

நேற்று மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சி இறுதி நிகழ்ச்சி நடந்தது. அதில் நடனம் ஆடிய பத்து பாடல்களில் எட்டு பாடல்கள் ஆங்கில பாப் பாடல்கள். இதுதான் கழகத்தின் தமிழ் பற்றா.

நல்ல வேளை அண்ணா நீங்கள் உயிரோடு இல்லை, இந்த ஆட்டங்களை பார்த்திருந்தால் காங்கிரசிலேயே போய் சேர்ந்து இருப்பீர்கள்.
இனமான பேராசிரியர் எப்படித்தான் இதை பொறுத்து கொண்டு இருக்கிறாரோ, வாழ்க நீர் எம்மான்.

இதுவரை விடலைகளின் ரிகார்ட் டான்ஸ் நடந்தது. அடுத்து மான் ஆட மயில் ஆல் மூன்றாம் பாகம் நிகழ்ச்சி ஆரம்பம், அதில் சிறு குழ்ந்தைகளின் அரைகுறை உடை நடனம் அரங்கேறப் போகிறதாம்.

அங்கே தொப்புள் கொடி உறவை சிங்கள இராணுவம் கொன்று குவிக்கிறது, இங்கே நாம் தொப்புளை யார் அழகாக சின்ன திரையில் காட்டுவது என்பதில் போட்டி நடத்துவோம். வாழ்க நம் தமிழ் பற்று, தமிழ் சேவை.

2 comments:

KARTHIK said...

நல்ல பதிவுங்க குப்பன்

ஆனா உங்கள மாதிரியானவங்க தொடர்ந்து இரண்டு பகுதிகளையும் பார்ப்பதால் தான் மூன்றாவது பகுதி வருகிறது :-))

கலாசார மாற்றத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் தவிர்க்கமுடியாதவை.

ஆனால் தமிழ் தமிழ் என்று உயிரை விடும் கழகம் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது வருத்தமாகவே உள்ளது.இவர்களோட தமிழ் பற்று எதுவரைக்கும்னா.லைவ்-நேரலை காலைவணக்கம் இப்படி சில அதோடு சரி.இதற்க்கு மக்கள் தொலைகாட்சி எவ்வளோவோ மேல்.
மக்கள் தொலைக்காட்சியைப் பார்த்தாவது திருந்தினால் சரி.

தேவன் மாயம் said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
thevanmayam.blogspot.com