Saturday, September 27, 2008

விஜய் டிவி தந்த விஜயன் - தமிழ் எங்கள் மூச்சு

விஜய் டிவி தந்த விஜயன் - தமிழ் எங்கள் மூச்சு
விஜய் டிவி தரும் மற்றும் ஒரு நல்ல நிகழ்ச்சி தமிழ் எங்கள் பேச்சு மூச்சு. (போட்டி மனப்பான்மையை உருவாக்கும் நிகழ்ச்சிதான், ) இருந்தாலும் சகோதரர் விஜய் தன் பேச்சு திறனால் அந்த குறை யை மறக்க செய்கிறார்.
விஜயன் இன் பேச்சை கண்டு நான் வார வாரம வியாய்க்கிறேன், மகிழ்கிறேன், பாராட்டுகிறேன்.
விஜயன் கடுமையாக உழைக்கிறார், தன்னிகரில்லா மனிதர் வைகோ வின் சாயலில் பேசும் பாங்கு, கருத்துக்கள், உடல் அசைவு அனைத்தும் அருமை.
விஜயனை பாராட்டி தட்டி கொடுத்து சிறப்பிக்கும் நெல்லை கண்ணன், சுப வீ, ராசா, அவ்வை நடராஜன் ஆகியோருக்கும் நன்றி.
தம்பி விஜயனுக்கு இதயம் .கனிந்த வாழ்த்துக்கள்

Monday, September 22, 2008

குன்றக்குடி அடிகளாரும் பெரியார் விருதும் - திமுக காங்கிரஸ் மாதிரி சபையும்

நேற்று ஒரு அதிசயம் திருச்சியில் நடந்தது. குன்றக்குடி அடிகளார் விபூதி பூசி கொண்டு, ருத்ராட்ச மாலை அணிந்து பேசுகிறார் பகுத்தறிவும், கடவுள் மறுப்பு கொள்கையும் இன்னும் வளர வேண்டும் என்று.
அவர் சொல்கிறார் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை இன்னும் முழுழ்மை அடைய வில்லை அதை நாம் இன்னும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்கிறார்.
விழாவில் பேசிய வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் காதர் மொய்தீன் ,கருணாநிதி நீண்ட காலம் வாழ அல்லாஹ் அருள் புரியட்டும் என்கிறார்.
புழுகர் ஆர் எம் வீரப்பனோ தான் எப்போதும் கருணாநிதியுடன் கூடவே இருந்ததாக்சொல்கிறார்.
இதை விட கொடுமை காங்கிரசிருக்கு மந்திரி சபையில் இடம் வேண்டும் என்ற கோரிக்கை (உபயம் சிதம்பரம்).
அண்ணாதுரை மற்றும் நீதி கட்சி பிரமுகர்கள் கட்சி ஆரம்பித்ததே காங்கிரசை விரட்ட வேண்டும் மந்திரி சபையில் இருந்து என்பதற்காக. இன்று அண்ணாதுரை விழாவிலே நீதி கட்சி கொள்கை நீர்த்து போயிற்று போல.
பெரியார், அண்ணா கொள்கைகள் எல்லாம் நீர்த்து போயிற்றா.
அல்லது இதை சண் டிவியில் நேரலையில் பார்க்கும் நாம்தான் மூடர்களா.
அல்லது அரசியலில் இது எல்லாம் சாதாரணம் அப்பா (உபயம் கௌண்டமணி) என்று நாம் சிறிது விட்டு மறந்து விட வேண்டுமா.
அல்லது இதை விட அடுத்து அம்மா ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் இதே வீரமணி, தோல் திருமா, குமார், ஆர் எம் வீரப்பன் பேசும் புகழுரைகளும் கேட்டு ரசிக்க வேண்டுமா.

Friday, September 19, 2008

நளினியை விடுதலை செய்யலாமா - ராஜிவ் காந்தி படுகொலை

நளினியை விடுதலை செய்யலாமா - ராஜிவ் காந்தி படுகொலை
நளினி இன்றோடு பதினேழு வருடங்கள் சிறையில் இருந்து விட்டார். ஆயுள் தண்டனை (பதினான்கு ) வருடம் முடிந்து விட்டது. இன்னும் தமிழாக அரசு விடுதலை செய்ய தயங்குகிறது.
மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் .ஆனால் இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடாதா.
(லீலாவதி கொலை யாளிகளை விடுதலை செய்து விட்டோம், ) கண்ணகி எரித்த மதுரை ஊரு நியாயமே தனி கதை ங்க. (அரசியல்லே இதெல்லாம் சகஜம் அப்பா)
நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல வாருங்கள்.

பெரியார் - கடவுள் எதிர்ப்பு அல்லது பார்ப்பனீய எதிர்ப்பு

பெரியார் - கடவுள் எதிர்ப்பு அல்லது பார்ப்பனீய எதிர்ப்பு
எனக்கு இந்த ஐயம் எப்போதும் உண்டு. பெரியாருக்கு இந்து மத கடவுள் ஆனா ,ராமர், பிள்ளையார் மட்டும் தான் புடிக்காதா அல்லது இஸ்லாம் கடவுள் ஆனா முகம்மது நபி , இயேசு கிறிஸ்து வும் புடிக்காத.
பெரியாரோ , கலைஞரோ, அனபழஅகனோ முகம்மது நபி , இயேசு கிறிஸ்து பற்றி கேலி, கிண்டல் பேசி நான் கேட்டது இல்லை, படித்து இல்லை,.
பெரியாரின் உண்மையான கொள்கை என்ன, கடவுள் எதிர்ப்பா அல்லது பார்ப்பனீய எதிர்ப்பா.

ஏதாவது கட்டுரை அல்லது புத்தகம் இருந்தால் தொடர்பு கொடுக்கவும்.

குறிப்பு: வீரமணி யை நான் பெரியாரி கொள்கை வாதி என்றே கொள்ள வில்லை. இன்று கலைஞர்களுக்கு விருது கொடுக்கும் அவர் நாளைக்கே அம்மா வின் காலில் விழுது ஆசி வாங்குவர் என்பது எல்லாரும் அறிந்தது.

Wednesday, September 10, 2008

கவுரவ டாக்டர் பட்டங்கள் -என்ன பயன்- சோனியா , மன்மோகன், கலைஞர்

சமீபத்தில் சென்னை பல்கலை கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழஅங்கியது. இதனால் யாருக்கு என்ன லாபம், (ஒரு வேலை அந்த கூடத்திற்கு ஏற்பாடு செய்த ஒலி அமைப்பாளர்,, உணவு , குடி தண்ணீர் வழாங்கிய வணிகர்க்கு சிறு லாபம் கிடைத்து இருக்கும்).

இதை தவிர்த்து பார்த்தால் மக்களின் (நமது) வரி பணம் எந்த அளவு விரயம் ஆகிறது. அதுவும் மின் தட்டுபாடு உள்ள இந்த கால கட்டத்தில் அத்தனை விளக்குகள், குளிரூட்ட பட்ட சாதனம், அத்தனை போக்குவரத்து செலவுகள், இன்ன பிற.

இனியாவது, பல்கலை கழஅகங்கள் இந்த கவுரவ டாக்டர் பட்ட கலாச்சாரங்களை நிறுத்தி கொள்ளுமா. குறைந்த பட்சம் அந்த விழாக்களை ஆவது எளிமையாக நடத்துமா.

Tuesday, September 2, 2008

டிவி ரியாலிட்டி ஷோ

தமிழக தொலைக்கட்சிகளில் தினமும் போட்டி மனப்பான்மையை வளர்க்கும் நிகழ்ச்சியே இப்போது ஒளிபரப்ப படுகிறது.
இது மிகவும் ஆபத்தான விஷயம். நாளைய தலைமுறைக்கு போட்டி மனப்பான்மை ஒன்றையே இந்த நிகழ்ச்சிகள் கற்று கொடுக்கின்றன.
இந்த நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மகிழ்ச்சி காணும் மனப்பான்மையை கற்று கொடுப்போம் நமது குழஅந்தைகட்க்கு.

நண்பர்கள் தங்கள் கருத்துக்களை கூறவும்.
குப்பன்_யாஹூ