Thursday, November 27, 2008

கடல் புரத்தில் - வண்ண நிலவன்

கடல் புரத்தில் - வண்ண நிலவன்

புத்தகத்தை அளித்த கிழ்க்கு பதிப்பகம், ஹரன் பிரசன்னாவிற்கு நன்றிகள். ஏற்கனவே பதிவர் லேகா இந்த புத்தகம் குறித்து எழுதிய அருமையான விமர்சனம் படித்து இருந்ததால் அதிக எதிர்பார்ப்புடன் படிக்க தொடங்கினேன்.(என் விமர்சனத்தை விட லேகாவின் விமர்சனம் சிறந்ததாக இருக்கும்- http://yalisai.blogspot.com/2008/07/blog-post_22.html).
எதிர்பார்ப்புகள் வீண் போக வில்லை. என் மனதில் உள்ள எதிர்ப்பார்ப்புகளை விட நூறு மடங்கு மிக சிறப்பாக எழுதி இருக்கிறார் வண்ண நிலவன். நன்றிகள் பல வண்ண நிலவன் அவர்களே.

அப்படியே வாசிப்பவர்களை உவரி, உடன்குடி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம், வீரபாண்டியன் பட்டணம், திருசெந்தூர், புன்னக்காயல், தூத்துக்குடி, நாசரேத், இடிந்தகரை, ஊருக்கே தூக்கி கொண்டு போய் விடுகிறார்.என் உயர் பள்ளி கல்வியை ஆத்தூரில் படித்ததால் மீனவ நண்பர்கள் அதிகம் (அருகில்தான் புன்னக்காயல், பழையகாயல்).

கதையில் வரும் பிலோமி என் அக்காவுடன் படித்த புன்னக்காயல் சகாயராணி அக்காவை நினைவு படுத்தி கொண்டே இருந்தார். (இந்த பதிவு எழுதும் போது கூட கண்ணீர் மல்குகிறது).

பிலோமியின் அண்ணன் ஸெபஸ்தி, என்னுடன் படித்த டெய்சி செல்வராணி யின் அண்ணன் தாமஸ் பெர்னாண்டோவை நினவு படுத்தினார். கதையை இரவு படித்து விட்டு (பத்து மணி இருக்கும்) படுக்கையில் படித்தால் தூக்கமே வர வில்லை இரண்டு மணி நேரத்திற்கு.நினவு அலைகள் எங்கு எங்கோ சென்றன.

இது உண்மை கதையா அல்லது கற்பனை கதையா என்று பட்டி மன்றமே நடத்தலாம். வண்ண நிலவன் அந்த அளவு சிறப்பாக எழுதி உள்ளார்.
மீன் பரவர்கள் மேல் எப்போதுமே எனக்கு, என் குடுமபத்தார்க்கு மிகுந்த அன்பு, மரியாதை உண்டு., அடி மனதில் ஒற்றுமை, பரந்த மனப்பான்மை, அடுத்தவர் முன்னேறுவது கண்டு ஆனந்த படுதல் போன்ற நல்ல குணங்கள் உள்ள மனிதர்கள்.

கதையின் போக்கு , கதை முடிவு குறித்து நான் எழுத விரும்ப வில்லை, படிப்பவர்களுக்கு பிலோமியின் காதல் முடிவு என்ன ஆகும் என்ற பரபரப்பு இருக்கட்டும் என்பது என் ஆசை.

சிறந்த வரிகள் பல இருக்கின்றன:"தூரத்திலே கடல் இரைகிறது. யாரோ ஒரு பெண் தன் பாடுகள் தீராமல் புலம்பி கொண்டிருக்கிறது போல கேட்டது."
முதலில் குறிக்க தொடங்கினேன்., எழுத்து என்னை விழுங்கத் தொடங்கியதும் குறிப்பதை நிறுத்தி விட்டேன்.

பிலோமி ரஞ்சி யின் உரையாடல்கள் மிக அருமை. ஐசக், பவுலு, சாமிதாஸ் போன்றோர் எல்லா கடல் புறத்து கிராமங்களிலும் இருக்கின்றனர்.
இந்த கதை தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோயில் கடல் புறத்தில் நடந்தது போல இருந்தாலும் , இவை போன்ற நிகழ்வுகள் எல்லா கடலோர மாவட்டங்களிலும் நடப்பவை.

ஒரு நல்ல தமிழ் சினிமா (மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, வெயில், பாசமலர், பராசக்தி, anjali ) மனதில் ஏற்படுத்திய தொந்தரவை வண்ண நிலவன் ஏற்படுத்தி உள்ளார். திரைப்படங்களுடன் புத்தகங்களை ஒப்பீடு செய்தல் தவறுதான், மற்ற புத்தகங்களோடு ஒப்பீடு செய்து வீண் வம்புகள் உருவாக்க வேண்டாம் என்று கருதுவதால் என்னை மன்னிப்பீர்களாக

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்களேன்.

Saturday, November 22, 2008

சன் டி வி, தினகரனால் தான் திமுக ஆட்சி - காமெடி

சன் டி வி, தினகரனால் தான் திமுக ஆட்சி - காமெடி

மாறன் சகோதரரக்ள் அறிக்கை, கடிதம் படித்தால் சிரிப்பை தவிர வேறு ஒன்றும் வராது. கலாநிதி சொல்கிறார், திமுக ஆட்சியே சண் டி வி , தினகரன் (பழைய கே பி கந்தசாமி அய்யா தினகரன் அல்ல) ஆகியவற்றால் தான் கிடைத்ததாம். ஆனால் கலைஞர்க்கு நன்றி கடன் இல்லையாம், தயாநிதி மாறனை பதவியை விட்டு தூக்கி விட்டாராம்.

திமுக வில் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத தயாநிதி மாறனுக்கு எம் பி தகுதி எங்கிருந்து வந்தது. கலைஞரின் பேரனாக இல்லாவிடில், ஒரு திமுக வட்ட பிரதிநிதி, தயாநிதிக்காக தேர்தலில் உழைதிருப்பாரா.

பொதுக்குழு, செயற்குழு, ஒன்றிய கழக தேர்தல் இது பற்றி எல்லாம் ஏதும் தெர்யுமா தயாநிதிக்கும், கலாநிதிக்கும்.

காலம் சென்ற முரசொலி மாறனுக்கே தெரியாதே அந்த அளவு. எத்தனை பொதுக்குழு கூட்டங்கள், மாநாடுகளில் மாறன் பேசும் பொது, உடன்பிறப்புகள் எந்த அளவு புலம்பி நொந்து போவார்கள் என்பது நாடு அறிந்த செய்தி.

கலைஞரின் உறவினர் என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்தே முரசொலி மாறனுக்கு மந்திரி பதவி தரப் பட்டது, (விடுதலை விரும்பி, வைகோ, முகமது சகி, எல் கணேசன், குப்புசாமி, மிசா கணேசன், போன்றோர் எல்லாம் இருந்த போதும்)

உண்மையாக கட்சிக்கு உழைத்த தொண்டர்களை விட்டு விட்டு, உறவை பார்த்து பதவி வழஅங்கியது கலைஞர் செய்த மிகப் பெரிய தப்பு, அதற்கான தண்டனை இப்போது கிடைத்து விட்டது.

இங்கே பேராசிரியரின் அனுபவத்தை, பண்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும், அவர்தான் கலைஞரிடம் சொன்னாரம், ஏதோ சின்ன பசங்க,செங்கல்பட்ட தாண்டி தமிழ்நாடுன்னா என்ன என்று தெரியாத பசங்க, பாவம் விட்ருங்க.

Thursday, November 20, 2008

வாசித்தோம் வளர்ந்தோம் -படித்து கிழித்தவை

லேகா விற்கு நன்றி ( யாழிசை )வாசிப்பு குறித்த தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு.

என் முதல் வாசிப்பு தினமணி, தினமலர், தினத்தந்தி (எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்புகளில்). அப்பொழுது தெருக்களில் நண்பர்களிடம் சினிமா சம்பந்தாமான செய்திகள் யார் முதலில் சொல்வது, படித்து என்று பெரிய போட்டி, கர்வம் இருக்கும்.

பத்தாம் வகுப்பில் சுத்தமாக வாசிக்க வில்லை. அதுவும் எட்டயபுரத்தில் இருந்து கொண்டு. ஒருவேளை அந்த மண்ணையே படித்தேன் போல.
பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பின் பொழுது சினிமா எக்ஸ்பிரஸ், ஸ்போர்ட்ஸ் ஸ்டார் , தினமலர், மாலை முரசு, குங்குமம், தினமலர் என்று முன்னேற்றம். அதிகமாக சினிமா செய்திகள் தான்.

ஐந்தாம் வகுப்பின் பொழுது விபரமே புரியாமல் வாசித்தவை விஷ்ணு ஸஹஸ்ரநமாம், அபிராமி அந்தாதி போன்றவை. பன்னிரண்டாம் வகுப்பில் மீண்டும் விபரமே புரியாமல், ருத்ரம், சமகம், தேவராம் ...

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் தினமும் நூலகம் செல்வேன். (நன்றி -நெல்லை நகரம், எங்கள் தெரு சக மாணவர்கள் ) ஹிந்து, எக்ஸ்ப்றேச்சில் உள்ளே நுழைய ஆரம்பித்தேன். ஹிந்துவில் மாநிலம் செய்திகள் மட்டுமே லேசாக புர்யும்.

பீ காம் சேர்ந்த வுடன் மாற்றம் வந்தது. தீப்பொறி ஆறுமுகம், விடுதலை விரும்பி, வைகோ , காளிமுத்து போன்றவர்களின் மேடை பேச்சு கேட்க்க தொடங்கிய நேரம், தீப்பொறி ஆறுமுகம் சொன்ன ஒரு செய்தி, தினமும் பன்னிரண்டு நாளிதழ் படிப்பேன்,எட்டு வார இதழ்க படிப்பேன் என்றார். கல்லூரி நூலகத்தில் ஹிந்து, எக்ஸ்பிரஸ், கோம்பெடிடின் success, கோம்பெடிடின் ரெவிஎவ், சப்பான், இந்தியா டுடே, த வீக், பிசினஸ் இந்தியா, ஜூனியர் போஸ்ட் எல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன்.

வைகோவின் அடுக்கு மொழி , எதுகை மோனை பேச்சு கலைஞர், அண்ணாவை படிக்க தூண்டியது. மதுரை டிக்டா ரவி, காவேரி மணியம், புதூர் பூமிநாதன் நட்பு, மதுரை அரசியல் சுவர் விளம்பரங்கள் (ஓய்வறியா உதயசூரியன், முத்தாரமே முரசொலிக்க வாராய்..) வாசிக்கும் ஆர்வாதை தீவிரப் படுத்தியது. கலைஞர், அண்ணாவின் படைப்புக்கள் பெருமளவு வாசித்தேன்.(சுவைத்தேன்). அப்பொழுது மண்டல கமிசன், வீ பி சிங்க் போராட்டம் போன்றவை தீவிரமாக இருந்த காலம்.

முரசொலி, தினகரன் (கே பி கந்தசாமி கால) படித்தேன், அதை தொடர்பு படுத்த மீண்டும் தினமணி. அப்போது மாலன் ஆசிரியர் (நான் மாலனுக்கு என்றென்றும் கடமை பட்டுளேன்). மாலன் மூலம் சுதாங்கன் , சுப்ரமண்ய ராசு, பாலகுமாரன் பெயர்கள் அறிமுகம். தினமணி கதிரில் பாலகுமாரன் கல்யாண ரதம் / கனவு எழுதினார். அங்கிருந்து பாலகுமாரன் தொடக்கம். மூன்று மாத காலத்திற்குள் ௮0 பாலகுமாரன் புத்தகம் படித்து இருப்பேன். (மெர்குரி பூக்கள், மணல் நதி, இனிது இனிது காதல் இனிது, என்றென்றும் அன்புடன், கரையோர முதலைகள், தாயுமானவன், கனவுகள் விற்பவன், இதற்காகத்தான் ஆசைப்பட்டயா ...)

பாலகுமாரன் மனசு, சுஜாதா, வாஸந்தி பற்றி எழுதி இருந்தார்.
நெல்லை கோவிலுக்கு சுஜாதா வந்தார், (கல்லூரியில் நான் இரண்டாம் ஆண்டு என நினைக்கிறேன், சுஜாதாவிடம் ஒரு விடலை பய்யனாக நான் கெட்ட கேள்வி 'சார் மனசு உடம்பில் எங்கு இருக்கிறது. சுஜாதா ஜூனியர் போஸ்ட் ஓர் ஏன் எதற்கு எப்படி யில் இதை பற்றி எழுதிய ஞாபகம். சுஜாதாவின் அந்த வரிகளை படித்ததும் எனக்கு கை கால் புரியவில்லை.
அடுத்த நாளே பாளையம்கோட்டை மத்திய நூலகம் சென்று சுஜாதாவின் கதைகள் படிக்க துவங்கினேன். நிறைவான நகரம், கொலை உதிர் காலம், விக்ரம், கனவு தொழிற்சாலை...

அதில் இருந்து வாஸந்தி, மாலன், வண்ண நிலவன், தி க சி, கல்யாண்ஜி, பாமரன், தி ஜா, எல்லாம் படித்தேன். அப்பொழுது தமிழ் எழுத்து உலகம், எழுத்தாளர் வாழ்க்கை முறை எல்லாம் புரி பட தொடங்கியது.

பின்பு அதமதாபாத் இந்திய மேலாண்மை கல்லூரி போனதும் ஆங்கிலப் புத்தகம் அறிமுகம் ஆனது, ஜாக் வால்ஷ்...
பின்பு வெளிநாட்டு வேலை, ப்ரோஜக்ட் போனதும் மீண்டும் தமிழ் புத்தகம், வண்ண நிலவன், பிரபஞ்சன், ஜெயகாந்தன், ஜெய மோகன், நாஞ்சில் நாடன், சல்மா, கனிமொழி அக்கா, சமுத்ரம், சுப வீ, பொன்னீலன், சுப மங்கள, கலைமகள்.. விகடன் மூலம் எஸ் ராமக்ரிஷ்ணன் அறிமுகம்.

பின்பு சென்னை வந்ததும் கம்பர், பாரதி, தேவாரம், திவ்ய பிரபந்தம், பாமரன், கோணங்கி, திலகவதி என்று எல்லாரும்.

திரும்ப விவரம் அர்த்தம் புரிந்து விஷ்ணு சகாச்ரனாமம், ருத்ரம், உபன்யாசம் (ராமகிருஷ்ண மடம் வெளியீடு).

இணையம் வந்த பிறகு புத்தக வாசிப்பு பெருமளவு குறைந்தது. யாஹூ, ரெடிப்ப், பால்டழ்க் yahoo. rediff, paltalk, ஹிச்சட்டேர்ன சாட்டில் மனிதர்களை படிக்க தொடங்கியது. அப்புறம் வலை பதிவு வாசித்தல் (காயத்ரி பாலை திணை, லேகா, டுபுக்கு, மாமி, இலவச கொத்தனார், ஈழ வலைபதிவர்...)

என்னுடைய பரிந்துரைகள்:
சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் (எல்லா பகுதிகளும்)
பாலகுமாரனின் மணல் நதி
எஸ் ராமகிருஷ்ணனின் அலைவோம் திரிவோம், கதா விலாசம்.
jack walsh - winning, straight from த gut
stephen covey- seven habits of highly effective people, first in பிரஸ்ட்
peter drucker = daily druckerThe definitive ட்ருச்கேர்
by Elizabeth Hass ஏடெர்ஸ்ஹெஇம்
The Toyota way, The Mickency mind, Knowing doing gap.

டுபுக்கு, பாலை திணை, யாழிசை, மாமி வலை பதிவுகள்.

எழுதுவதை விட வாசித்தாலே ஆசையாக விருப்பமாக இருக்கிறது.

இளையராசாவின் இசை , கமலின் நடிப்பு, வைகோவின் மேடை பேச்சு போல வாசிப்பும் என்றும் அலுப்பதில்லை.


நான் அழைப்பது காயத்ரி paalai திணை மற்றும் அனைத்து பதிவர்களையும்.

Saturday, November 15, 2008

கழக ஆட்சியும் தேவர் தேவேந்திரர் சண்டையும்

கழக ஆட்சியும் தேவர் தேவேந்திரர் சண்டையும்
இதற்கு முன்பு நடந்த கழக ஆட்சியில் தென் தமிழ்கத்தில் ஜாதி மோதல் ஏற்பட்டது. அப்பொழுது மூப்பனாரின் அறிவுரை படி மாவட்டங்கள், அரசு போக்குவரத்து கழகங்கள் பெயர் மாற்றம் செய்ய பட்டது.
இன்றைய ஆட்சியிலும் மீண்டும் அதே ஜாதி சண்டை. இப்பொழுது கல்லூரி பெயர்களும் மற்ற படுமோ. சமத்துவ கல்லூரிகள் தொடங்கலாம்.
அன்று தங்க பாண்டியன், பொன் முத்து, ச தங்கவேலு, வைகோ , பசும்பொன் தா கிரிடிணன் இருந்தார்கள்,

இணைய தள காலத்திலும் சாதியத்தை பாதுகாத்து வரும் ஒரே சமூகம் நம் தமிழ் சமூகம் தான்.

Friday, November 14, 2008

சன் டி வி- நள்ளிரவு கைது கொல்றாங்களே - இன்று சட்ட கல்லூரி காட்சிகள்

சன் டி வி- நள்ளிரவு கைது கொல்றாங்களே - இன்று சட்ட கல்லூரி காட்சிகள்
அன்று சன் டி வி யில் 1000 முறை ஒலி/ஒளி பரப்பினார்கள்:
இனிமேல் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது.
நள்ளிரவு கைது- ஐயோ கொல்றாங்களே
அன்று தாத்தாவும், அப்பாவும் சொல்லி கொடுத்தார்கள் 1000 முறை ஒளி பரப்ப சொல்லி.
இன்று பேரன் கள் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, என்பது போல சட்ட கல்லூரி வன்முறையை 10000 முறை காட்டினார்கள்.
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.
குப்பன்_யாஹூ

Thursday, November 13, 2008

சட்ட கல்லூரி ஜாதீய அரசியல் வன்முறை

சட்ட கல்லூரி ஜாதீய அரசியல் வன்முறை
நானும் மேபோக்காக இது ஏதோ மாணவர்களின் இரு பிரிவினர்க்கு இடையே நடந்த வன்முறை என்றுதான் நினைத்தேன்.
செய்தியாளர்களிடம் பேசிய பிறகுதான் தெரிகிறது, இது இரு வேறு ஜாதியை சார்ந்த அமைச்சர்களின் உறவினர் மாணவர்களுக்கு இடையே நடந்த வன்முறை என்று.
ஒகேனக்கல், முல்லை பெரியார், தமிழ் ஈழம் போல இந்த பிரச்சனையும் சுமூகமாக தீர்ந்து விடும்.
வாரணம் ஆயிரம், தெனாவட்டு வந்ததும் இந்த பிரச்னை எங்களுக்கு மறந்து விடும்.
வீடயோ காட்சி காண இங்கே செல்லுங்கள்.

http://in.youtube.com/watch?v=d5AsWevkj1A

மின்கட்டணம் இணையத்தளத்தில் அறியலாம்.

மின் கட்டணம் இணையத்தளம் மூலமாக அறியலாம், செலுத்தலாம்.
தமிழ் நாட்டில் வசிப்பவர்கள் இணையத்தளம் மூலம் மின் கட்டணம் அறியலாம், செலுத்தலாம்.
விபரங்கள் கீழே:
http://www.tnebnet.org/newlt/menu2.html

http://www.tnebnet.org/awp/TNEB/

மின் அட்டையில் உள்ள என் அறிந்திருக்க வேண்டும்.

Thursday, November 6, 2008

ஆம் நம்மால் முடியும் - தமிழக ஒபாமா வைகோ விடுதலை.

ஆம் நம்மால் முடியும் - தமிழக ஒபாமா வைகோ விடுதலை.
ஆம் வைகோ திரும்பவும் புடம் போட்ட தங்கம் போல வெளி வந்து உள்ளார். தேவையற்ற இந்த கைடிதினால் மக்களின் வரிப்பணம் தான் விரயம். கழக ஆட்சியின் இன்னொரு அந்தர் பல்டி இது.

தன்னம்பிக்கை ஊட்டும் வைகோ எழுதிய ஆம் நம்மால் முடியும் புத்தகம் முடிந்தால் படியுங்கள்