Sunday, October 26, 2008

மான் ஆட மயில் ஆட- ஆங்கில பாடல் நடனம்- தமிழ் பற்று வாழ்க.

நேற்று மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சி இறுதி நிகழ்ச்சி நடந்தது. அதில் நடனம் ஆடிய பத்து பாடல்களில் எட்டு பாடல்கள் ஆங்கில பாப் பாடல்கள். இதுதான் கழகத்தின் தமிழ் பற்றா.

நல்ல வேளை அண்ணா நீங்கள் உயிரோடு இல்லை, இந்த ஆட்டங்களை பார்த்திருந்தால் காங்கிரசிலேயே போய் சேர்ந்து இருப்பீர்கள்.
இனமான பேராசிரியர் எப்படித்தான் இதை பொறுத்து கொண்டு இருக்கிறாரோ, வாழ்க நீர் எம்மான்.

இதுவரை விடலைகளின் ரிகார்ட் டான்ஸ் நடந்தது. அடுத்து மான் ஆட மயில் ஆல் மூன்றாம் பாகம் நிகழ்ச்சி ஆரம்பம், அதில் சிறு குழ்ந்தைகளின் அரைகுறை உடை நடனம் அரங்கேறப் போகிறதாம்.

அங்கே தொப்புள் கொடி உறவை சிங்கள இராணுவம் கொன்று குவிக்கிறது, இங்கே நாம் தொப்புளை யார் அழகாக சின்ன திரையில் காட்டுவது என்பதில் போட்டி நடத்துவோம். வாழ்க நம் தமிழ் பற்று, தமிழ் சேவை.

Saturday, October 25, 2008

வைகோ, சீமான், அமீர் கைது - தந்தி அடிப்போம் வாருங்கள்

வைகோ, மு கண்ணப்பன், சீமான், அமீர் விடுதலை குறித்து தந்தி அடிக்கலாமா அல்லது sms அடிக்கலாமா. சுப வீரபாண்டியனும் , கி வீரமனயும் தான் விடை சொல்ல வேண்டும்.

அல்லது மனித சங்கிலி அமைப்போமா. கோபாலபுரத்தில் இருந்து புழழ் வரை மனித சங்கிலி அமைப்போமா.

புலம் பெயர்ந்த தமிழ்ர்களே சொல்லுங்கள்.

குப்பன்_யாஹூ

Friday, October 24, 2008

வைகோ கைதும் பீட்டர் அல்போன்ஸின் மந்திரி கனவும்

வைகோ கைது நடவடிக்கையால் பயன் பெற்றோர் , வீண் அடைந்தோர் பட்டியல்:

வைகோ- பயன் பதினைந்து நாட்கள் நிறைய புத்தகங்கள் படிக்கலாம், ஓய்வு எடுக்கலாம்.வாலிபால் விளையாடலாம்.

கலைஞர்- பயன். அழகிரி, ஸ்டாலின் பிரசினையில் இருந்து சற்று ஓய்வு.

ஜெயலலிதா- பயன் அறிக்கை விட ஒரு பிரச்சனை கிடைத்தது

பீட்டர் அல்போன்ஸ், சுதர்சனம் - கொனஜ்ம் நம்பிக்கையுடன் இருந்த மந்திரி பதவி காலி. இனிமேல் காமராஜர் வந்துதான் மந்திரி பதவி தர வேண்டும்.

வலைபதிவர்கள்- பதிவு போட அருமையான தலைப்பு சிக்கி உள்ளது.

Thursday, October 23, 2008

ஈழத் தமிழர்களுக்கு கலைஞரின் தீபாவளி பரிசு - வைகோ .

ஈழத் தமிழர்களுக்கு கலைஞரின் தீபாவளி பரிசு - வைகோ .

ஈழத் தமிழ்ர்களை ஆதரித்து வைகோ பேசியதற்கு கைது. இது பற்றி நாம் பேசுவதை விட திராவிடர் கழக தலைவர் வீரமணி, சுப வீரபாண்டியன், பழ நெடுமாறன் கருத்து கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்.

ஞானியின் ஒ பக்கங்களில் இதை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

குப்பன்_யாஹூ

கலைஞரின் தமிழ் உணர்வு - வெளிச்சம் - வைகோ கைது

கலைஞரின் தமிழ் உணர்வு - வெளிச்சம் - வைகோ கைது

கலைஞரின் சுய ரூபம் தெரிந்து விட்டது. திராவிட தலைவரின் தமிழ் உணர்வு வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. சோனியா அம்மையாரை திருப்தி படுத்த கலைஞர் வைகோ மற்றும் கண்ணப்பன் ஐ கைது செய்து உள்ளார்.

புலம் பெயர்ந்த தமிழ்ர்களே இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். கலைஞரும் ஆற்காடு வீரா சாமி உம் மின் வெட்டு பிரச்சனையை மறக்க வைக்கவே இலங்கை தமிழார் பிரச்சனை நாடகம் ஆடினார்.

தமிழ் தலைவர் வீரமணி என்ன கருத்து சொல்கிறார் இது பற்றி.?

பிரபாகரனுக்கு ஒரு கருணா. தமிழ்ர்களுக்கு ஒரு ?

வலை பதிவர்கள் நாளை முதல் வைகோ கைதிற்கு கண்டனம் தெரிவித்து பதிவுகளை முடுக்கி விடுங்கள்.

குப்பன்_யாஹூ

ஆற்காடு வீராசாமிக்கு ஆறுதல் தந்த இலங்கை தமிழர் பிரச்சினை

ஆற்காடு வீராசாமிக்கு ஆறுதல் தந்த இலங்கை தமிழர் பிரச்சினை
ஆற்காடு வீராசாமி உம் , கலைஞர் கருணாநிதி உம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேக்கு நன்றி கடன் பட்டவர்கள். வேலுப்பிள்ளை பிரபகாரனுக்கும கூட.
மின் வெட்டு பிரச்சனை யை திசை திருப்ப ஒரு ரூபாய் அரிசி கூட உதவ வில்லை.
ஆபத் பாந்தவனாக வந்து உதவியது இலங்கை தமிழர் பிரச்சனை. இப்போது மக்கள் சற்று மறந்து இருக்கிறார்கள் மின் வெட்டை. அதுவும் ௨௪ ஆம் தேதி பகலில் மனித சங்கிலி வைத்தது கலைஞரின் புத்திசாலித்தனம்.
குப்பன்_யாஹூ

Friday, October 17, 2008

விகடன் தீபாவளி மலர் 2008- வாங்கி படியுங்கள் அனைவரும்

விகடன் தீபாவளி மலர் - வாங்கி படியுங்கள் அனைவரும்.

ஆனந்த விகடன் தீபாவளி மலர் வந்து விட்டது. வாங்கி படியுங்கள். மனுஷ்ய புத்திரன் கட்டுரை, சுஜாதா சிறுகதை, கனிமொழி அக்கா நேர்காணல், பாடலாசிரியர் தாமரை சிறுகதை....

வலைபதிவர் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

மனுஷ்யபுத்திரன் சொல்வது போல சுஜாதா எழுத்து இல்லாத தீபாவளி மலர் இது.

தாமரையின் சாமியார் சிறுகதை அருமை.

குப்பன்_யாஹூ

Friday, October 10, 2008

102 முறை வாசித்த பதிவு

102முறை வாசித்த பதிவு
நான் இந்த பதிவை 102முறையேனும் வாசித்திருப்பேன்., இன்னமும் ஆர்வம் குறையவில்லை, சலிக்க வில்லை:

எழுத்துக்களிலேயே உணர்வுகளை நாம் உணரலாம். அந்த பதிவரின் பதிவை அப்படியே காப்பி செய்து பதித்துள்ளேன். இதை சொல்வதில் எந்த வித தயக்கமும் வெக்கமும் இல்லை:

"புத்தகங்களை விட்டு விலகி மனிதர்களைப் படிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்து கூடவே எச்சரிக்கை உணர்வொன்றும் நிரந்தரமாய்த் தங்கி விட்டது மனதில். அன்பும் அக்கறையுமாய் உள்ளில் ஆழப்பதியும் மனிதர்கள் பிரிவென்னும் பெயரால் உறவை வேரோடு பிடுங்கிப் போகையில் மண் சரிவைப் போன்றே மனமும் சரிந்து போக நேரிடுகிறது. எவரேனும் அன்பு சொல்லி அருகில் வந்தால் பயமாயிருக்கிறது. "எவரின் அன்பையும் ஏற்பதுமில்லை நிராகரிப்பதுமில்லை" என்று பொதுவிதியொன்றைப் புனைந்து கொண்டு இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்தாலும் சுவர்களில் கசிந்தூறும் மழை நீராய், எவருடைய அதீத அன்பினாலோ, எதிர்நோக்கங்கள் அற்ற அக்கறையினாலோ எப்போதாவது இறுக்கங்கள் தளர்ந்து மனதின் ஊற்றுக்கண்களில் அன்பு கசியத் தொடங்கி விடுகிறது.
அன்றும் அப்படித்தான் நிகழ்ந்தது. பிரிவு, துயர், நிராகரிப்பு, வலியென கண்ணீர் சுமந்த கவிதைகளையே அதிகம் பதிவித்து வரும் நான் இடையிடையே லேசாய்ச் சிரிக்கவும் வைத்திருப்பேன். அது தான் அவளை என்னிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். பதிவிடத் தொடங்கிய என் ஆரம்ப நாட்களில், எவரும் என்னை கவனத்தில் கொண்டிராத தினங்களிலிருந்தே என் பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு வந்த அவள், முதன் முதலாய் என் சோகப்பதிவு தொடர்பாய் மடல் ஒன்று அனுப்பியிருந்தாள்.
"உன் வரிகள் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. என்ன சோகம்னு நீ என்கிட்ட சொல்லித்தான் ஆகனும்னு கட்டாயமில்ல. ஆனா யார்கிட்டயாச்சும் சொல்லனும்னு நீ விரும்பினா U can count on me ன்னு சொல்லத்தான் இதை எழுதினேன்"
என்று சொல்லப்பட்டிருந்தது அதில்! அந்த கடிதம் கொண்டு வந்த அன்பு, வார்த்தைகளில் இருந்த ஆறுதல், அடுத்தவர் அந்தரங்கத்தில் எட்டிப் பார்க்க விரும்பாத இங்கிதம், 'நானிருக்கிறேன் உனக்கு' என்ற நம்பிக்கை எல்லாம் சேர்ந்து எதிர்பாராமல் என்னை ஆக்கிரமிக்க, முகமறியாத அந்த பிரியத்தின் நெகிழ்வில் லேசாய் கண்ணீர் துளிர்த்தது.
அதன் பின்.. முதன் முதலாய் என் பிறந்தநாளன்று பேசத் துவங்கினாள். வாழ்த்தினாள்.. நலம் விசாரித்தாள்...என் கவிதைகளை சிலாகித்தாள்.. கேலியாய் விமர்சித்தாள்.. தினமும் பேசியே இம்சித்தாள்... பேசாத நாட்களில் 'எங்கே போனாளென' கவலையாய் யோசிக்க வைத்தாள்..
இத்தனையும் செய்த அவள்... அழகான ராட்சசி...
என் இனிய ஜி3!

இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறாள்!!
கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் பரிவு, கொஞ்சம் பொறுப்பு.. நிறைய்ய்ய குறும்புகள்.. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்ட அற்புதமான பெண் அவள்! அவளை நான் எத்தனை நேசிக்கிறேன் என்பதை இதுவரை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை நானும் சொன்னதில்லை. ஆயினும் என்ன? என் அன்பைச் சொல்ல இன்றைய தினம் நிச்சயம் பொருத்தமாயிருக்கக் கூடும்."
http://gayatri8782.blogspot.com/2007/09/blog-post.html

Saturday, October 4, 2008

சென்னை வலைபதிவர் சந்திப்பு இனிதே நடந்தது.

சென்னை வலைபதிவர் சந்திப்பு இனிதே நடந்தது.
சென்னை வலை பதிவர் சந்திப்பு உத்தமர் க்தாந்தி சிலையின் அருகில், விவேகந்தர் இல்லம் அருகில், நடிகர் திலகம் சிவாஜியின் சிலை எதிரில், பாரதியார் உலவிய திருவல்லிகேணி பகுதியில், மிக அருமையாக நடந்து ஏறியது.
பதிவுலக ஜாம்பவான்க்ள மிக விரிவாக பதிவு போடுவார்கள். ஜோடி என் ஒன்றில் இன்று சங்கீத என்ன நிறம் உடையில் வருவார் என்று காண வேண்டிய மிக முக்கிய அலுவல் இருந்ததால் நான் பாதியிலே ஜூட் ஆகி விட்டேன்
அக்டோபர் ௨ ஆம் தேதி புதிய பதிவு தொடக்கி உள்ள ஞானி என்ற ஒரு புதிய பதிவரும் கலந்து கொண்டார். பதிவரோடு பதிவராக எந்த பாகுபாடும் இல்லாமல் பழ்கிய பேசிய ஞானி போற்றுதலுக்கு உரியவர்.
தன்னை பற்றியே அதிகம் செய்திகள் வர வேண்டும் என்று வலை உலகத்தில் நாம் எல்லாரும் விரும்ப - ஞானி அவர்கள், தன்னை பற்றி செய்தி வேண்டாம், தன்னை சிறப்பிக்க வேண்டாம், தானும் ஒரு சக பதிவர் என்று சொல்லி, செய்து காட்டிய எளிமை தான் , காந்தி சிலை அருகில் நாங்கள் கற்ற மிக முக்கிய பாடம்.

Thursday, October 2, 2008

பட்டி மன்றம்= கோஷ்டிகள் அதிகம் காங்கிரசிலா அல்லது வலை பதிவர்களிடமா

பட்டி மன்றம்= கோஷ்டிகள் அதிகம் காங்கிரசிலா அல்லது வலை பதிவர்களிடமா
எனக்கும் மற்றொரு பதிவாலர்க்கும் இடையே தீராத விவாதம். நான் சொல்வது தமிழ் நாடு காங்கிரஸ் காட்சியில் தான் கோஷ்டிகள் அதிகம் என்று.
ஆனால், அவர் புள்ளி விவரங்களோடு வாதிடுகிறார் தமிழ் வலை பதிவாளர்கள் மத்தியில்தான் அதிக கோஷ்டிகள் என்று.
நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த மிக முக்கியமான விவாதத்தை முடித்து வைக்க வேண்டுகிறேன்
அனபன் குப்பன்_யாஹூ

Wednesday, October 1, 2008

அமெரிக்க பெயில் அவுட்டும் ஆதம்பாக்கம் வீட்டு வாடகை அவுட்டும்

அமெரிக்க பெயில் அவுட்டும் ஆதம்பாக்கம் வீட்டு வாடகை அவுட்டும்
அமெரிக்கா பெயில் அவுட் வெற்றி பெறும் என்று பெரிதும் நம்பினாள் எனது அதை மகள் அகிலா..
ஆக்செஞ்சரில் அலுவல் பார்க்கும் அவளின் கவலை அக்டோபெர் முதல் சம்பளம் 64ஆயிரம் இல் இருந்து எழுபத்தி எழு aayirm ஆக வேண்டும் என்று.
இது போதாது என்று ஆஸ்திரேலியா வில் இருக்கும் அவள் அண்ணன் கட்டி உள்ள ஆதம் பாக்கம் அடுக்கு மடி குடிஇருப்பின் வாடகையை அதிகரிக்கலாம் என்று ஆசை பட்டாள். அதிலும் மண் விழுந்தது.
ஆறாம் வகுப்பு படித்த ஆறுமுகம் என்ற வீட்டு வாடகை தரகர் கூட சொல்கிறார், அம்மா அமெரிக்கா பொருளாதாரம் அவுட், நம்ம ஊரிலும் சம்பளம் கட்டு, எனவே அதிக வாடகை இனிமேல் எதிர்பார்க்காதீர்கள் என்று.
அகிலா வோடு சேர்ந்து ஆறுமுகம், முனுசாமி வகையறாக்களும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்த போகிறார்கள், ஒபாமா சீக்கிரம் பதவி ஏற்க வேண்டும் என்று.

நவராத்ரி கொலு ஏன் பார்பனர் வீடுகளோடு நின்று விடுகிறது.

நவராத்ரி கொலு ஏன் பார்பனர் வீடுகளோடு நின்று விடுகிறது.
நவராத்ரி கொலு என்பது மிக உன்னதமான நிகழ்வு , பண்பாடு, செயல், பண்டிகை.
தெருவில் உள்ள அனைத்து வீட்டு உறுப்பினர்களும் ஒருவருக்கு ஒருவர் நட்பு, அன்பு பரஸ்பரம் பாராட்ட மிகவும் உதவியாக உள்ள நிகழ்வு.
அனைத்து குழஅந்தைகளும் தங்களிடம் உள்ள பாட்டு, நடனம், பேச்சு திறமைகளை வெளி கொணர மிக சிறந்த சந்தர்ப்பம். இது நடந்தால் நாம் டி வி யில் ஜோடி நொ௧, சூப்பர் சிங்கர் ஐ சம்ஸ் மூலம் தேட வேண்டாம்.
இந்த நிகழ்வு ஏன் பார்ப்பன வீடுகளோடு நின்று விடுகிறது. அனைத்து சாதி மக்களும் கொண்டாடி மகிழழாமெ தமிழஅகத்தில்.