கடல் புரத்தில் - வண்ண நிலவன்
புத்தகத்தை அளித்த கிழ்க்கு பதிப்பகம், ஹரன் பிரசன்னாவிற்கு நன்றிகள். ஏற்கனவே பதிவர் லேகா இந்த புத்தகம் குறித்து எழுதிய அருமையான விமர்சனம் படித்து இருந்ததால் அதிக எதிர்பார்ப்புடன் படிக்க தொடங்கினேன்.(என் விமர்சனத்தை விட லேகாவின் விமர்சனம் சிறந்ததாக இருக்கும்- http://yalisai.blogspot.com/2008/07/blog-post_22.html).
எதிர்பார்ப்புகள் வீண் போக வில்லை. என் மனதில் உள்ள எதிர்ப்பார்ப்புகளை விட நூறு மடங்கு மிக சிறப்பாக எழுதி இருக்கிறார் வண்ண நிலவன். நன்றிகள் பல வண்ண நிலவன் அவர்களே.
அப்படியே வாசிப்பவர்களை உவரி, உடன்குடி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம், வீரபாண்டியன் பட்டணம், திருசெந்தூர், புன்னக்காயல், தூத்துக்குடி, நாசரேத், இடிந்தகரை, ஊருக்கே தூக்கி கொண்டு போய் விடுகிறார்.என் உயர் பள்ளி கல்வியை ஆத்தூரில் படித்ததால் மீனவ நண்பர்கள் அதிகம் (அருகில்தான் புன்னக்காயல், பழையகாயல்).
கதையில் வரும் பிலோமி என் அக்காவுடன் படித்த புன்னக்காயல் சகாயராணி அக்காவை நினைவு படுத்தி கொண்டே இருந்தார். (இந்த பதிவு எழுதும் போது கூட கண்ணீர் மல்குகிறது).
பிலோமியின் அண்ணன் ஸெபஸ்தி, என்னுடன் படித்த டெய்சி செல்வராணி யின் அண்ணன் தாமஸ் பெர்னாண்டோவை நினவு படுத்தினார். கதையை இரவு படித்து விட்டு (பத்து மணி இருக்கும்) படுக்கையில் படித்தால் தூக்கமே வர வில்லை இரண்டு மணி நேரத்திற்கு.நினவு அலைகள் எங்கு எங்கோ சென்றன.
இது உண்மை கதையா அல்லது கற்பனை கதையா என்று பட்டி மன்றமே நடத்தலாம். வண்ண நிலவன் அந்த அளவு சிறப்பாக எழுதி உள்ளார்.
மீன் பரவர்கள் மேல் எப்போதுமே எனக்கு, என் குடுமபத்தார்க்கு மிகுந்த அன்பு, மரியாதை உண்டு., அடி மனதில் ஒற்றுமை, பரந்த மனப்பான்மை, அடுத்தவர் முன்னேறுவது கண்டு ஆனந்த படுதல் போன்ற நல்ல குணங்கள் உள்ள மனிதர்கள்.
கதையின் போக்கு , கதை முடிவு குறித்து நான் எழுத விரும்ப வில்லை, படிப்பவர்களுக்கு பிலோமியின் காதல் முடிவு என்ன ஆகும் என்ற பரபரப்பு இருக்கட்டும் என்பது என் ஆசை.
சிறந்த வரிகள் பல இருக்கின்றன:"தூரத்திலே கடல் இரைகிறது. யாரோ ஒரு பெண் தன் பாடுகள் தீராமல் புலம்பி கொண்டிருக்கிறது போல கேட்டது."
முதலில் குறிக்க தொடங்கினேன்., எழுத்து என்னை விழுங்கத் தொடங்கியதும் குறிப்பதை நிறுத்தி விட்டேன்.
பிலோமி ரஞ்சி யின் உரையாடல்கள் மிக அருமை. ஐசக், பவுலு, சாமிதாஸ் போன்றோர் எல்லா கடல் புறத்து கிராமங்களிலும் இருக்கின்றனர்.
இந்த கதை தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோயில் கடல் புறத்தில் நடந்தது போல இருந்தாலும் , இவை போன்ற நிகழ்வுகள் எல்லா கடலோர மாவட்டங்களிலும் நடப்பவை.
ஒரு நல்ல தமிழ் சினிமா (மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, வெயில், பாசமலர், பராசக்தி, anjali ) மனதில் ஏற்படுத்திய தொந்தரவை வண்ண நிலவன் ஏற்படுத்தி உள்ளார். திரைப்படங்களுடன் புத்தகங்களை ஒப்பீடு செய்தல் தவறுதான், மற்ற புத்தகங்களோடு ஒப்பீடு செய்து வீண் வம்புகள் உருவாக்க வேண்டாம் என்று கருதுவதால் என்னை மன்னிப்பீர்களாக
நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்களேன்.
பணி (Pani) - மலையாள சினிமா
21 hours ago
6 comments:
சுப்பன், உங்கள் விமர்சனமும் நல்லா இருக்கு..
நன்றி பீ மோர்கன்.
புத்தகத்தை உங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு விமர்சத்துள்ளீர்கள்.
அருமை
சமீபத்தில்தான் கடல்புரத்தில் புத்தகத்தை வாங்கினேன். சீக்கிரம் படிக்க வேண்டும்,
ஒரு நல்ல தமிழ் சினிமா (மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, வெயில், பாசமலர், பராசக்தி, anjali ) மனதில் ஏற்படுத்திய தொந்தரவை வண்ண நிலவன் ஏற்படுத்தி உள்ளார்.
வண்ண நிலவன் விமர்சனம் அருமை.தமிழ் இலக்கியம் பத்தி ப்ளாகில் தேடுபவர்களுக்கும் புதியவர்களுக்கும் இத்தகய பதிவுகள் மிக அவசியம்.இத்தகய பதிவுகளுக்கு முன்னுரிமையும் பின்னுட்டங்களும் குறைவாக இருப்பது தமிழ் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.தமிழ் ப்ளாக் திரட்டிகள் இவற்றில் கவனம் செலுத்த வென்டும். நல்லா எழுதியிரிக்கிய அப்பு! தொடர்ந்து எழுதுங்க.
தேவா.
// நல்ல பதிவு...குப்பன்.
உங்கள் பதிவு படிக்கத் தூண்டுகிறது.
புத்தகம் வீட்டில் தான் இருக்கிறது...//
ஒரு நல்ல எழுத்தாளனை விமர்சனங்கள் தான் அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும்.
மற்றவர் எழுத்துக்களைப் பற்றியும் பதிவிடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.
Post a Comment