சன் டி வி, தினகரனால் தான் திமுக ஆட்சி - காமெடி
மாறன் சகோதரரக்ள் அறிக்கை, கடிதம் படித்தால் சிரிப்பை தவிர வேறு ஒன்றும் வராது. கலாநிதி சொல்கிறார், திமுக ஆட்சியே சண் டி வி , தினகரன் (பழைய கே பி கந்தசாமி அய்யா தினகரன் அல்ல) ஆகியவற்றால் தான் கிடைத்ததாம். ஆனால் கலைஞர்க்கு நன்றி கடன் இல்லையாம், தயாநிதி மாறனை பதவியை விட்டு தூக்கி விட்டாராம்.
திமுக வில் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத தயாநிதி மாறனுக்கு எம் பி தகுதி எங்கிருந்து வந்தது. கலைஞரின் பேரனாக இல்லாவிடில், ஒரு திமுக வட்ட பிரதிநிதி, தயாநிதிக்காக தேர்தலில் உழைதிருப்பாரா.
பொதுக்குழு, செயற்குழு, ஒன்றிய கழக தேர்தல் இது பற்றி எல்லாம் ஏதும் தெர்யுமா தயாநிதிக்கும், கலாநிதிக்கும்.
காலம் சென்ற முரசொலி மாறனுக்கே தெரியாதே அந்த அளவு. எத்தனை பொதுக்குழு கூட்டங்கள், மாநாடுகளில் மாறன் பேசும் பொது, உடன்பிறப்புகள் எந்த அளவு புலம்பி நொந்து போவார்கள் என்பது நாடு அறிந்த செய்தி.
கலைஞரின் உறவினர் என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்தே முரசொலி மாறனுக்கு மந்திரி பதவி தரப் பட்டது, (விடுதலை விரும்பி, வைகோ, முகமது சகி, எல் கணேசன், குப்புசாமி, மிசா கணேசன், போன்றோர் எல்லாம் இருந்த போதும்)
உண்மையாக கட்சிக்கு உழைத்த தொண்டர்களை விட்டு விட்டு, உறவை பார்த்து பதவி வழஅங்கியது கலைஞர் செய்த மிகப் பெரிய தப்பு, அதற்கான தண்டனை இப்போது கிடைத்து விட்டது.
இங்கே பேராசிரியரின் அனுபவத்தை, பண்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும், அவர்தான் கலைஞரிடம் சொன்னாரம், ஏதோ சின்ன பசங்க,செங்கல்பட்ட தாண்டி தமிழ்நாடுன்னா என்ன என்று தெரியாத பசங்க, பாவம் விட்ருங்க.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அதிமுக ஆட்சியில் சன் டிவி செய்திகளை பார்தாலே வெறுப்பாக இருக்கும். ஏதோ வேறு நாட்டில் வாழ்வது போல உணர்வை தரும்.
சன் செய்திகளில் முழுவதும் திமுக பிரசாரம் தானே செய்தார்கள்..அய்யோ கொல்றாங்க, முதல் அமைச்சருக்கு அவங்க வீட்டு தனி நம்பருக்கு போன் போடுங்கன்னு நம்பர் டிவியில் போட்டதுன்னு நிறைய சொல்லாம்.
காலம் மாறி விட்டது. மக்களுக்கு திமுக அதிமுக இடையில் வேறுபாடு இல்லை. ஜெயலலிதா செய்த நல்லவைகள் கூட சன் டிவியால் பெரிதுபடுத்தியால் தான் அதிமுக் ஆட்சியை இழந்தது.
மிகப்பெரிய கூட்டனியை எதிர்த்த அதிமுக + இடங்களை பெற்றாதே சன் செய்திகளின் அபாண்டகளை தாண்டிதான்
தமாசு...தமாசு...
//மாறன் சகோதரரக்ள் அறிக்கை, கடிதம் படித்தால் சிரிப்பை தவிர வேறு ஒன்றும் வராது. //
இல்லீங்க எனக்கு அப்படியெல்லாம் சிரிப்பு வரலைங்க. தலைவர் சொல்றதைப் பார்த்தாதான் சிரிப்பு வருதுங்க...
Email follow-up comments to
இதுக்காக இன்னொரு பின்னூட்டமுங்க
சின்னப்பசங்க.....கலைஞர் இல்லேன்னா இவுங்களுக்கு சன் டீவியும் கெடயாது , தினகரனும் கெடயாதுங்கற உண்மை புரியாம பேசறாங்க...
வளத்த கடா மார்புல குத்தறதுங்கிறது இதுதானோ???
கலைஞர் செய்த தவறுக்குத் தான் தண்டனை அனுபவிக்கிறார்...வேறென்ன சொல்ல?
//இங்கே பேராசிரியரின் அனுபவத்தை, பண்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும், அவர்தான் கலைஞரிடம் சொன்னாரம், ஏதோ சின்ன பசங்க,செங்கல்பட்ட தாண்டி தமிழ்நாடுன்னா என்ன என்று தெரியாத பசங்க, பாவம் விட்ருங்க. //
இவரும் நெடுஞ்செழியனும் நெடுமரமா இருந்து என்னத்த கண்டாங்க?
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அண்ணாவால் கண்டெடுக்கபட்டவர்கள், இந்த சாப்பாட்டுக்கே சிங்கி அடித்து பின்னர் கோடிகளுக்கு அதிபதியான(அது எப்படிப்பா ஒரே தலைமுறையில தாத்தாவில் இருந்து மகன், மகள், பேரன் பேத்திகள் வரை இவ்வளவு சம்பாதிக்க முடிந்தது?) கலைஞருக்கும், எம்.ஜி.ஆர். ஜெ க்கும் சின்சாப் போட முடியுது.
:-)
மாறன் சகோதரர்கள் "லாரல் ஹார்டி"களாகத்தான் இருக்கிறார்கள்.அங்க சேஷ்டைகளுக்குப் பதில் அர்த்தமற்ற அசட்டு அறிக்கைகளே இவர்களது நகைச்சுவை. ஆனாலும் வேதனை கொப்புளிக்கும் நகைச்சுவை.தமிழ் நாட்டில் தமிழ் இனம் உயிர்ப்போடு இருப்பதற்கு மூச்சுக்காற்றாக இருப்பது கலைஞர் மட்டுமே. அவரது"பேரன்"களாக இருப்பதாலேயே "குபேரன்"களாக உலா வந்தவர்கள தாத்தாவுக்கு கொள்ளிச்சட்டி கூட ஏந்த தயாராகி விட்டார்களோ என்று ஐயுறத்தோன்றுகிறது.சன் டி.வி என்று உதயசூரியனை தமிழர்களின் வீட்டுக்குள் எல்லாம் வெளிச்சம் காட்டியவர்கள் யாரோ ஒரு சூனியக்காரியின்
பிணந்தின்னிக்கழுகு கண்களின் பார்வைக்கு "பெட்ரொ மாக்ஸ் லைட்"பிடித்துக்கொண்டு பிரசாரம் செய்யத்துவங்கி விட்டார்கள்.இந்த இரட்டையர்களின் "ஊதுகுழல்கள்" நாயனத்தில் சில "ஜெமினி"கள் புளகாங்கிதம் அடையலாம்.ஆனால் இவை அந்த முரசொலி மாறனுக்கு முள்ளாக காதை குத்தும் கர்ணகடூரங்கள் தான். இந்த குடும்ப சண்டைகள் சோழி குலுக்கியதில் சில சோழியன் குடுமிகளுக்கு தான் கொண்டாட்டம். நம் செம்மொழியை மீண்டும் ஒரு "பொம்மை மொழி" ஆக்கிட சில சூத்திரதாரிகள் நடத்தும் பொம்மலாட்டமே இந்த வெள்ளைச்சட்டை லாரல் ஹார்டிகளின் சோக காமெடி! இனிய தமிழ் நெஞ்சங்களே இந்த தமிழ் நாட்டை வெறும் வஞ்சங்கள் வீழ்த்திட இடம் கொடுத்து விடாதீர்கள்.
இப்படிக்கு
ஒரு தமிழ் மண்ணன்.
நன்றி அனானிமஸ்.
நன்றி தருமி, தங்கள் பதிவை படிக்கிறேன்.
மதுபாலா சரியாக சொல்லி உள்ளீர்கள், அதுவும் கண்டிப்பு இல்லாமல் வளர்த்த கடாக்கள்.
நன்றி இரண்டாம் அனானிமஸ்.
நன்றி பரிசல்காரர்.
//நன்றி தருமி, தங்கள் பதிவை படிக்கிறேன்.//
ஏதோ தப்பாகப் புரிந்து கொண்டீர்களென நினைக்கிறேன். நான் எந்தப் பதிவு பற்றியும் சொல்லவில்லையே ..
தருமி :
Email follow-up comments to
'இதுக்காக இன்னொரு பின்னூட்டமுங்க.'
தருமி, நான் தவறாக புரிந்து கொண்டேன், மன்னிக்கவும். நீங்கள் பின்னூட்டம் என்று எழுதியதை பதிவு என்று புரிந்து கொண்டேன். அவசரத்தில்.
மருத நாயகத்தை பற்றி ஒரு ஆய்வாளர் எழுதும் போது
அவன் மட்டும் சரியான நோக்கில் சிந்தித்து இருந்தால்
இந்தியாவின் வரலாறு மாறிப்போயிருக்கும்.ஆங்கிலேயர் ஆட்சி இல்லாமல் போயிருக்கும் என்று எழுதினர் உண்மை!
அது போல கருணாநிதி அரசியலுக்கு வராமல் போயிருந்தால் இவர்கள் என்ன வேலை செய்து பிழைத்திருப்பார்கள் என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகிறேன்!
www.tamilraja.tk
Post a Comment