Thursday, November 20, 2008

வாசித்தோம் வளர்ந்தோம் -படித்து கிழித்தவை

லேகா விற்கு நன்றி ( யாழிசை )வாசிப்பு குறித்த தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு.

என் முதல் வாசிப்பு தினமணி, தினமலர், தினத்தந்தி (எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்புகளில்). அப்பொழுது தெருக்களில் நண்பர்களிடம் சினிமா சம்பந்தாமான செய்திகள் யார் முதலில் சொல்வது, படித்து என்று பெரிய போட்டி, கர்வம் இருக்கும்.

பத்தாம் வகுப்பில் சுத்தமாக வாசிக்க வில்லை. அதுவும் எட்டயபுரத்தில் இருந்து கொண்டு. ஒருவேளை அந்த மண்ணையே படித்தேன் போல.
பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பின் பொழுது சினிமா எக்ஸ்பிரஸ், ஸ்போர்ட்ஸ் ஸ்டார் , தினமலர், மாலை முரசு, குங்குமம், தினமலர் என்று முன்னேற்றம். அதிகமாக சினிமா செய்திகள் தான்.

ஐந்தாம் வகுப்பின் பொழுது விபரமே புரியாமல் வாசித்தவை விஷ்ணு ஸஹஸ்ரநமாம், அபிராமி அந்தாதி போன்றவை. பன்னிரண்டாம் வகுப்பில் மீண்டும் விபரமே புரியாமல், ருத்ரம், சமகம், தேவராம் ...

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் தினமும் நூலகம் செல்வேன். (நன்றி -நெல்லை நகரம், எங்கள் தெரு சக மாணவர்கள் ) ஹிந்து, எக்ஸ்ப்றேச்சில் உள்ளே நுழைய ஆரம்பித்தேன். ஹிந்துவில் மாநிலம் செய்திகள் மட்டுமே லேசாக புர்யும்.

பீ காம் சேர்ந்த வுடன் மாற்றம் வந்தது. தீப்பொறி ஆறுமுகம், விடுதலை விரும்பி, வைகோ , காளிமுத்து போன்றவர்களின் மேடை பேச்சு கேட்க்க தொடங்கிய நேரம், தீப்பொறி ஆறுமுகம் சொன்ன ஒரு செய்தி, தினமும் பன்னிரண்டு நாளிதழ் படிப்பேன்,எட்டு வார இதழ்க படிப்பேன் என்றார். கல்லூரி நூலகத்தில் ஹிந்து, எக்ஸ்பிரஸ், கோம்பெடிடின் success, கோம்பெடிடின் ரெவிஎவ், சப்பான், இந்தியா டுடே, த வீக், பிசினஸ் இந்தியா, ஜூனியர் போஸ்ட் எல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன்.

வைகோவின் அடுக்கு மொழி , எதுகை மோனை பேச்சு கலைஞர், அண்ணாவை படிக்க தூண்டியது. மதுரை டிக்டா ரவி, காவேரி மணியம், புதூர் பூமிநாதன் நட்பு, மதுரை அரசியல் சுவர் விளம்பரங்கள் (ஓய்வறியா உதயசூரியன், முத்தாரமே முரசொலிக்க வாராய்..) வாசிக்கும் ஆர்வாதை தீவிரப் படுத்தியது. கலைஞர், அண்ணாவின் படைப்புக்கள் பெருமளவு வாசித்தேன்.(சுவைத்தேன்). அப்பொழுது மண்டல கமிசன், வீ பி சிங்க் போராட்டம் போன்றவை தீவிரமாக இருந்த காலம்.

முரசொலி, தினகரன் (கே பி கந்தசாமி கால) படித்தேன், அதை தொடர்பு படுத்த மீண்டும் தினமணி. அப்போது மாலன் ஆசிரியர் (நான் மாலனுக்கு என்றென்றும் கடமை பட்டுளேன்). மாலன் மூலம் சுதாங்கன் , சுப்ரமண்ய ராசு, பாலகுமாரன் பெயர்கள் அறிமுகம். தினமணி கதிரில் பாலகுமாரன் கல்யாண ரதம் / கனவு எழுதினார். அங்கிருந்து பாலகுமாரன் தொடக்கம். மூன்று மாத காலத்திற்குள் ௮0 பாலகுமாரன் புத்தகம் படித்து இருப்பேன். (மெர்குரி பூக்கள், மணல் நதி, இனிது இனிது காதல் இனிது, என்றென்றும் அன்புடன், கரையோர முதலைகள், தாயுமானவன், கனவுகள் விற்பவன், இதற்காகத்தான் ஆசைப்பட்டயா ...)

பாலகுமாரன் மனசு, சுஜாதா, வாஸந்தி பற்றி எழுதி இருந்தார்.
நெல்லை கோவிலுக்கு சுஜாதா வந்தார், (கல்லூரியில் நான் இரண்டாம் ஆண்டு என நினைக்கிறேன், சுஜாதாவிடம் ஒரு விடலை பய்யனாக நான் கெட்ட கேள்வி 'சார் மனசு உடம்பில் எங்கு இருக்கிறது. சுஜாதா ஜூனியர் போஸ்ட் ஓர் ஏன் எதற்கு எப்படி யில் இதை பற்றி எழுதிய ஞாபகம். சுஜாதாவின் அந்த வரிகளை படித்ததும் எனக்கு கை கால் புரியவில்லை.
அடுத்த நாளே பாளையம்கோட்டை மத்திய நூலகம் சென்று சுஜாதாவின் கதைகள் படிக்க துவங்கினேன். நிறைவான நகரம், கொலை உதிர் காலம், விக்ரம், கனவு தொழிற்சாலை...

அதில் இருந்து வாஸந்தி, மாலன், வண்ண நிலவன், தி க சி, கல்யாண்ஜி, பாமரன், தி ஜா, எல்லாம் படித்தேன். அப்பொழுது தமிழ் எழுத்து உலகம், எழுத்தாளர் வாழ்க்கை முறை எல்லாம் புரி பட தொடங்கியது.

பின்பு அதமதாபாத் இந்திய மேலாண்மை கல்லூரி போனதும் ஆங்கிலப் புத்தகம் அறிமுகம் ஆனது, ஜாக் வால்ஷ்...
பின்பு வெளிநாட்டு வேலை, ப்ரோஜக்ட் போனதும் மீண்டும் தமிழ் புத்தகம், வண்ண நிலவன், பிரபஞ்சன், ஜெயகாந்தன், ஜெய மோகன், நாஞ்சில் நாடன், சல்மா, கனிமொழி அக்கா, சமுத்ரம், சுப வீ, பொன்னீலன், சுப மங்கள, கலைமகள்.. விகடன் மூலம் எஸ் ராமக்ரிஷ்ணன் அறிமுகம்.

பின்பு சென்னை வந்ததும் கம்பர், பாரதி, தேவாரம், திவ்ய பிரபந்தம், பாமரன், கோணங்கி, திலகவதி என்று எல்லாரும்.

திரும்ப விவரம் அர்த்தம் புரிந்து விஷ்ணு சகாச்ரனாமம், ருத்ரம், உபன்யாசம் (ராமகிருஷ்ண மடம் வெளியீடு).

இணையம் வந்த பிறகு புத்தக வாசிப்பு பெருமளவு குறைந்தது. யாஹூ, ரெடிப்ப், பால்டழ்க் yahoo. rediff, paltalk, ஹிச்சட்டேர்ன சாட்டில் மனிதர்களை படிக்க தொடங்கியது. அப்புறம் வலை பதிவு வாசித்தல் (காயத்ரி பாலை திணை, லேகா, டுபுக்கு, மாமி, இலவச கொத்தனார், ஈழ வலைபதிவர்...)

என்னுடைய பரிந்துரைகள்:
சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் (எல்லா பகுதிகளும்)
பாலகுமாரனின் மணல் நதி
எஸ் ராமகிருஷ்ணனின் அலைவோம் திரிவோம், கதா விலாசம்.
jack walsh - winning, straight from த gut
stephen covey- seven habits of highly effective people, first in பிரஸ்ட்
peter drucker = daily druckerThe definitive ட்ருச்கேர்
by Elizabeth Hass ஏடெர்ஸ்ஹெஇம்
The Toyota way, The Mickency mind, Knowing doing gap.

டுபுக்கு, பாலை திணை, யாழிசை, மாமி வலை பதிவுகள்.

எழுதுவதை விட வாசித்தாலே ஆசையாக விருப்பமாக இருக்கிறது.

இளையராசாவின் இசை , கமலின் நடிப்பு, வைகோவின் மேடை பேச்சு போல வாசிப்பும் என்றும் அலுப்பதில்லை.


நான் அழைப்பது காயத்ரி paalai திணை மற்றும் அனைத்து பதிவர்களையும்.

6 comments:

லேகா said...

அழைப்பை ஏற்று உடனே பதிவிட்டதிற்கு நன்றி.

பகிர்தலோடு கூடிய புத்தக பரிந்துரைதலுக்கு நன்றி.

குப்பன்.யாஹூ said...

வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு நன்றி லேகா,

எழுத்து பிழையை குறைக்க முயற்சிக்கிறேன்.

KARTHIK said...

நல்ல விமர்சனங்க.

மொத்தத்துல சுஜாதாவ வாசிக்காதவங்லே இருக்க முடியது போல

//நான் அழைப்பது காயத்ரி paalai திணை மற்றும் அனைத்து பதிவர்களையும்.//

புதுப்பொண்ண கூப்புடுறீங்க அப்படியே புது மாப்பிள்ளை சித்துவையும் கூப்பிட்டுருங்க.அது தான் நியாயம் :-))

குப்பன்.யாஹூ said...

கார்த்திக் - வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு நன்றி,.

நீங்களும் எழுதுங்கள் வாசிப்பு குறித்து, சித்தார்த் அவர்களின் பதிவிர்க்காகவும் காத்திருக்கிறேன்.

Krishnan said...

Nice sum-up of your reading habits. A typo has crept in : It is The McKinsey Mind. Please correct it.

குப்பன்.யாஹூ said...

Thanks Krishnan.

Will try to reduce the typo errors.