நேற்று ஒரு அதிசயம் திருச்சியில் நடந்தது. குன்றக்குடி அடிகளார் விபூதி பூசி கொண்டு, ருத்ராட்ச மாலை அணிந்து பேசுகிறார் பகுத்தறிவும், கடவுள் மறுப்பு கொள்கையும் இன்னும் வளர வேண்டும் என்று.
அவர் சொல்கிறார் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை இன்னும் முழுழ்மை அடைய வில்லை அதை நாம் இன்னும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்கிறார்.
விழாவில் பேசிய வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் காதர் மொய்தீன் ,கருணாநிதி நீண்ட காலம் வாழ அல்லாஹ் அருள் புரியட்டும் என்கிறார்.
புழுகர் ஆர் எம் வீரப்பனோ தான் எப்போதும் கருணாநிதியுடன் கூடவே இருந்ததாக்சொல்கிறார்.
இதை விட கொடுமை காங்கிரசிருக்கு மந்திரி சபையில் இடம் வேண்டும் என்ற கோரிக்கை (உபயம் சிதம்பரம்).
அண்ணாதுரை மற்றும் நீதி கட்சி பிரமுகர்கள் கட்சி ஆரம்பித்ததே காங்கிரசை விரட்ட வேண்டும் மந்திரி சபையில் இருந்து என்பதற்காக. இன்று அண்ணாதுரை விழாவிலே நீதி கட்சி கொள்கை நீர்த்து போயிற்று போல.
பெரியார், அண்ணா கொள்கைகள் எல்லாம் நீர்த்து போயிற்றா.
அல்லது இதை சண் டிவியில் நேரலையில் பார்க்கும் நாம்தான் மூடர்களா.
அல்லது அரசியலில் இது எல்லாம் சாதாரணம் அப்பா (உபயம் கௌண்டமணி) என்று நாம் சிறிது விட்டு மறந்து விட வேண்டுமா.
அல்லது இதை விட அடுத்து அம்மா ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் இதே வீரமணி, தோல் திருமா, குமார், ஆர் எம் வீரப்பன் பேசும் புகழுரைகளும் கேட்டு ரசிக்க வேண்டுமா.
பணி (Pani) - மலையாள சினிமா
21 hours ago
1 comment:
hai visit my blog.
Post a Comment