முரண்பாடு = சாரு நிவேதிதா - இந்தியா டுடே கமல் சிறப்பு இதழ்
இந்தியா டுடே தமிழ் பதிப்பு கமல் ஹாசன் குறித்த சிறப்பு இதழ் வெளியிட்டு உள்ளது.
அதில் சிறந்த கட்டுரைகள் உள்ளன - எஸ் ராமகிருஷ்ணன், யூகிசேது, ஜெயராம், மனுஷ்ய புத்திரன் , சந்தான பாரதி, நாசர், நிகில் முருகன்.
எல்லாரும் கமலிடம் வைக்கும் ஒரே வேண்டுகோள் உலக அளவிலான தமிழ் திரைப்படம் தொடர்ந்து தர வேண்டும் என்பதே.
சாரு நிவேதிதா தன் கட்டுரையில் கமலுக்கு உலக சினிமா விசயங்கள் நிறைய தெரியும் ஆனால் சிவாஜிக்கு உலக சினிமா மீது ஈடுபாடு இல்லை. எனவே தான் கமல் அளவு சிவாஜி உலக அரங்கில் பேசப் படவில்லை என்கிறார்.
உலக சினிமா தெரிந்த ஒரே உன்னத நடிகர் கமல் மட்டுமே என்று வாக்கியத்துக்கு வாக்கியம் புகழ்ந்து எழுதி உள்ளார்
இதே சாரு நிவேதிதா உயிர்மை இதழில் தசாவதாரம் விமர்சனம் கட்டுரையில் கமல் உலக சினிமாவை தமிழ் திரை உலகில் புகுத்த பார்கிறார். தசாவதாரம் ஒரு குப்பை சினிமா என்று எழுதி இருந்தார்.
அடுத்த மாதம் சுப்ரமணிய புரம் விமர்சனத்தில் சசிகுமார் உலக சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம், தெரிந்தால் கமல் மாத்ரி குழ்ம்பி விடுவார் என்று எழுதி உள்ளார்.
ஆறு மாதத்தில் ஏன் இந்த மாற்றம் சாரு நிவேதிதா.
சாரு கூறும் இன்னொரு விமர்சனம் கமல் இளம் , புதிய , பிரபலம் ஆகாத இயக்குனர்களுடன் சினிமா பண்ணுவது இல்லை என்று.
பிரளயன் உடன் அன்பே சிவம், பரதனை வலுக்கட்டாயாமாக தமிழுக்கு கொண்டு வந்து தேவர் மகன் செய்ய வைத்தது யார்., டி கே ராஜிவ்குமருடன் சாணக்யன் பண்ணியது யார்?
சங்கருடன் அந்நியன் செய்த போது சங்கர் மூன்று படங்களே முடித்து இருந்தார்.
கட்டுரையின் இறுதியில் சாரு நன்றாக பல்டி அடித்து உள்ளார். கமலிடம் மட்டுமே சொல்லும் உரிமை, சுதந்திரம் உண்டு , மற்ற நடிகர்களிடம் சொல்ல முடியாது என்று.
தேவர் சமூக மக்களுடன் நெருங்கி பழ்கியவன் என்ற முறையில் சொல்கிறேன் சாரு, என் பார்வையில் விருமாண்டி (சண்டியர்), தேவர் மகனில் இருந்த புழுதியின் தாக்கம், அருவா வீரம் பருத்தி வீரனில் இல்லை என்பதே உண்மை.
அதிலும் சண்டியரில் (விருமாண்டியில்) அந்த பொட்டி கடை காந்திமதி காட்சிகள் மிக இயல்பான காட்சி (அப்படியே நம் கண் முன்னே, போடி, தேனீ ஊர்களை கண் முன்னே கொண்டு வந்தனர்). சங்கிலி முருகனும், பாரதிராசாவும் அந்த காட்சி பார்த்தும் அழுது விட்டனராம்.
பருத்தி வீரனில் தேவர் படமா குறவர் படமா என்ற குழ்ப்பம் அமீரிடம் நிறையவே இருந்தது. தெரிந்தது.
நாங்களும் சாரு நிவேதிதா என்பதால் இந்த எதிர் விமர்சனத்தை எழுதுகிறோம், இதே அமிதாப் பச்சன் என்றால் எழுத மாட்டோம்.
குப்பன்_யாஹூ
'2025' புத்தாண்டு வாழ்த்துகள்!
1 day ago
6 comments:
//
சங்கருடன் அந்நியன் செய்த போது சங்கர் மூன்று படங்களே முடித்து இருந்தார்.
//
அது ”இந்தியன்” படம்.
நானும் சாரு என்பதனால்தான் ஒரு வார்த்தை பேசவில்லை
//நாங்களும் சாரு நிவேதிதா என்பதால் இந்த எதிர் விமர்சனத்தை எழுதுகிறோம், இதே அமிதாப் பச்சன் என்றால் எழுத மாட்டோம்.//
கலக்கல்!
சில திருத்தங்கள் ....
//பிரளயன் உடன் அன்பே சிவம்//
யார் இந்த பிரளயன்? என்ன படம் இயக்கியிருக்கிறார்? அன்பே சிவம் படத்தின் இயக்குனர் சுந்தர்.சி அல்லவா.
//டி கே ராஜிவ்குமருடன் சாணக்யன் பண்ணியது யார்?//
சாணக்யன் சரத்குமார் நடித்த படம் தான? அது கூட இயக்குனர் டி கே ராஜீவ்குமார் இல்லை.
//சங்கருடன் அந்நியன் செய்த போது சங்கர் மூன்று படங்களே முடித்து இருந்தார்.//
ஷங்கருடன் கமல் இணைந்த படம் இந்தியன், அந்நியன் அல்ல. அப்போது ஷங்கர் மூன்று அல்ல இரண்டே படங்கள் தான் இயக்கியிருந்தார், அது ஜென்டில்மன் மற்றும் காதலன்.
நன்றி ஆளவந்தான்.
ஆம் அது இந்தியன், நான் தவறுதலாக அந்நியன் என எழுதி விட்டேன்.
நன்றி உமையணன்.
நன்றி பினாத்தல் சுரேஷ்.
நன்றி நிலோபார் அன்பரசு.
பிரளயன் அன்பே சிவம் கதாசிரியர் (ப்ரன்யன் அல்லது பிரளயன்,, மூல மலயலா சினிமா அவரே இயக்கியது).
நான் சொல்லும் சாணக்யன் மலையாள சாணக்யன் , கமல் ஊர்மிளா, திலகன், ஜெயராம் நடித்த படம்.
சங்கருடன் இந்தியன். இரண்டுமே ஊழால் எதிர்ப்பு என்பதால் அடிக்கடி எனக்கு இந்த குழ்ப்பம்.
lol nic ecomment kuppan
Post a Comment