Thursday, September 10, 2009

ராகுலை மடக்கிய சென்னை பெண் நிருபர்

எந்த சானலிலும் தமன்னா, நமீதா பாட்டு இல்லாத தால் என்டிடிவி பார்க்க வேண்டியது ஆகி விட்டது. ராகுல் காந்தி இன்று பத்திரிக்கை நிருபர்களை சென்னையில் சந்தித்த நிகழ்ச்சி நேரடி ஒளி பரப்பு. அதற்கு முதலில் ராகுலுக்கு நன்றிகள்.(ஒளிவு மறைவு இல்லாமல்). ராகுல் யூத் யூத் என்ற வார்த்தையை எல்லா வாக்கியத்திலும் பயன் படுத்தினார். ஒரு பெண் நிருபர் கேட்டார், இளைஞர் இளைஞர் என்கிறீர்களே, ஆந்திராவில் ஏன் ஜெகன் என்ற இளைஞரை முதல்வர் ஆக்க இவ்வளவு யோசனை, தயக்கம்? ராகுல் ஒரு நொடி ஆடித்தான் போய் விட்டார். பின்னர் சுதாரித்து அதை முடிவு செய்ய வேண்டியது நான் அல்ல, கட்சியின் செயற்குழு, பொதுக்குழு என கழக தலைவர்கள் போல பதில் கூறி மழுப்பி விட்டார். இருந்தாலும் ராகுலின் முகத்தில், உடல் மொழியில் தெரிந்தது. அந்த நிருபரின் புத்தி சாலித்தனம், சமயோசித கேள்வி கேட்கும் திறன் குறித்த மகிழ்ச்சி. ராகுல் வாய் திறந்து அந்த பெண் நிருபரை பாராட்ட வில்லையே தவிர அவரது செய்கைகளில் தெரிந்தது. எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் அந்த பெண் நிருபருக்கு, நிருபர் பெயர், எந்த பத்திரிக்கை என்று தெரியவில்லை எனக்கு. கோபம் கொள்ளாது பொறுமையாக சமாளித்த ராகுலுக்கும் பாராட்டுக்கள்.

Monday, July 6, 2009

தமிழ்நாடு அகதி முகாம்- சாரதா கல்லூரி சேலம்- 30 மாணவிகள்

நேற்று தமிழ்நாட்டு மக்கள் தொலைகாட்சி பார்த்தேன். அதில் ஒரு நேர்காணல். நேரு என்ற இலங்கை தமிழர் (தற்போது வசிப்பது தமிழ்நாடு அகதிகள் முகாம்) பேசிய கருத்துக்கள். அவர் சொல்வது தமிழ்நாடு அரசும், மத்திய அரசும், தனியார் கல்லூரி, பள்ளி களும் அகதிகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். நடிகர் சூர்யா தன சொந்த செலவில் ஆறு சிறுவர்களுக்கு பள்ளி உடை செலவுகளை ஏற்று உள்ளாராம், சீமான், மணிவண்ணன், இல கணேசன் (பா ஜ கா) போன்றோரும் ஏற்று உள்ளனராம். சேலம் சாரதா கல்லூரி (ஆர்ய நிறுவனம், பார்ப்பனீய நிறுவனம்) முப்பது பெண்களுக்கு இலவச உடை, தங்கும் விடுதி, உணவு, கலூரி படிப்பு வழங்குகிறதாம் . நன் சொல்லவருவது வலைபதிவில் தான் நாம் ஆர்யர், புலம் பெயர்ந்த தமிழர் என்று எல்லாம் அடித்து கொள்கிறோம், ஆனால் நிஜ வாழ்வில் எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக உள்ளனர்.

Saturday, May 16, 2009

தேர்தல்- ஓர்குட், வலைபதிவு - மக்களிடம் பாதிப்பு ஏற்படுத்த முடிய வில்லை

ஆர்குட், வலைபதிவுகள், சாட் அறைகள் என எல்லா இடங்களிலும் காங்கிரஸ் திமுக கூட்டணியை தோற்கடிக்க எழுத்து வடிவில் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது. ஆனால் நிஜ வாழ்வில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று உள்ளது. எனவே ஆர்குட், பதிவுலகம் அந்த அளவு பாதிப்பு ஏற்படுத்த முடிய வில்லை என்பது புரிகிறது. ஒரு காரணம் இணயம் பயன்படுத்தும் பெரும்பாலான தமிழர்கள் வெளி நாட்டில் வசிப்பது (தொண்ணூறு சத விகிதம்). அதிமுக கூட்டணியை தான் குறை சொல்ல வேண்டும், இந்திய பிரச்சனைகளான ஸ்பெக்ட்ரம் ஊழல், அணு ஆயுத ஒப்பந்தம், மின் வெட்டு, தீவிரவாதம் இவற்றை மக்களிடம் எடுத்து செல்லாமல் இலங்கை தமிழ் ஈழம் மட்டுமே பிரதானம் என்று இருந்தது. வலைப் பதிவுகள் எல்லா மக்களிடமும் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்

Friday, May 8, 2009

ஒபாமா இன் பர்கர் ஷாப்- வாழும் மகாத்மா.

சமீபத்தில் பரக் ஒபாமா ஒரு சிறிய பர்கர் கடைக்கு சென்று மதிய உணவு உண்டார். பார்ப்பதற்கு ஒரு விளம்பர நிகழ்ச்சி போன்று முதலில் தோன்றினாலும், சற்று நேரம் கழித்து யோசிக்கையில், எவ்வளவு பெரிய விஷயம், அர்த்தம் உள்ளது என்று புரிகிறது. எவ்வளவு உயர்ந்த பதவியில் உள்ள நபர் எவ்வளவு எளிமையாக இயல்பாக , ஒரு சாதரண குடிமகன் போல நடந்து கொள்கிறார். அவரின் பேச்சுக்களில், செயல்களில், நடத்தையில் எந்த வித செயற்கை தனமும் இல்லை. ஒரு பஞ்சாயத்தின் வார்டு கவுன்சிலர் கூட நாலு ஸ்கார்பிஒ உடன் வந்து இறங்கி பந்தா பண்ணும் ஊரில் (நாட்டில்) இருக்கும் எனக்கு, ஒபாமாவின் இந்த செயல் மிகுந்த ஆச்சர்யம், நம்பிக்கை, உந்துதலை கொடுத்தது எனலாம். பதவியோ, அதிகாரமோ தன்னுடைய இயல்பை எப்போதும் மாற்றாது என்பதே அவர் உலகிற்கு அறிவிக்கும் செய்தி போல. பள்ளிகூட வரலாற்று புத்தகத்தில் தான் படித்து இருக்கிறேன், காந்தி என்ற மகான் எளிமையாக வாழ்ந்தார் என்று, இன்று என் வாழ் நாளில் இன்னொரு காந்தியை (மகானை) பார்க்கும் வாய்ப்பு கிட்டியது என சொல்வேன். வாழ்க நீ எம்மான், வாழ்க பல்லாண்டு.

Thursday, March 5, 2009

பாசிசம்- விஜய் டி வி, சுஜாதா, ஸ்ரீநிவாசன், உன்னி கிருஷ்ணன்

பாசிசம்- விஜய் டி வி, சுஜாதா, ஸ்ரீநிவாசன், உன்னி கிருஷ்ணன்

விஜய் டி வி யில் airtel சூப்பர் சிங்கர் என்ற பெயரில் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி நடப்பது நாம் அறிந்ததே. அதில் இப்போது பத்து போட்டியாளர்கள் உள்ளனர்.

அதில் ரஞ்சித் என்ற போட்டியாளர் தன் பொறியியல் கல்லூரி படிப்பு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் பாதிக்க படுகிறது எனக் கூறி தாமாக விலகுவதாக அறிவித்தார்.

அவர் கடந்த ஒரு வருடங்களாக தன் படிப்பை, கல்லூரி வகுப்பை இந்த போட்டிக்காக தியாகம் செய்து உள்ளார். இதற்கு மேல் படிப்பை விட்டு கொடுக்க முடியாது என்ற நிலைமையில் ரஞ்சித் எடுத்து உள்ள முடிவு பாராட்டுக்கு உரியது.

படிப்புதான் இளம் வயதில் முக்கியம், பொழுது போக்குகள் பிற்பாடே.

அaனால் இந்த முடிவை ரஞ்சித் அறிவித்த உடன், நீதிபதிகளா உள்ள சுஜாதா, ஸ்ரீநிவாஸ், உன்னி கிருஷ்ணன் சொல்வது , ரஞ்சித் நீங்கள் பெரிய தப்பு செய்து விட்டீர்கள் , எங்களுக்கு ஒரு போட்டியாளர் குறைந்து விட்டாரே என்ற பெரிய வருத்தம். (ஒரு போட்டியாளர் குறைந்தால் , மூன்று வார நிகழ்ச்சி, விளம்பர வருமானம், இவர்களின் வருமானம் குறையும் என்ற சமூக அக்கறை).
ரஞ்சித் நீங்கள் முன்னரே தெரிவித்து இருக்கலாமே, நங்கள் வேறு ஒரு போட்டியலறை தேர்வு செய்து இருப்போமே என்று குமுறுகிறார்கள்.

இப்படிப்பட்ட பாசிச எண்ணங்கள் நம் வீடு வரவேற்பு அறையில் விதைக்க படுகிண்டறன. இதை பார்க்கும் மாணவர்கள் சிந்தனை போக்கு எவ்வாறு மாறும் என்ற சமூக கவலை இல்லை ஸ்ரீநிவசுக்கும், சுஜாதாவிர்க்கும்.

தன் வருமானம் பாதிக்குமே என்ற சுயலாப சிந்தனையோடு இயங்கும் இவர்களை புறக்கணிப்போம், இத்தகைய நிகழ்ச்சிகளையும் புறக்கணிப்போம். ஒரு வருடம் தங்களுக்காக தன் வாழ்வை தொலைத்த அந்த ரஞ்சித் மீது ஒரு சொட்டு பரிதாபம் கூட இல்லை.

படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து இப்போதாவது இந்த மாயை இல் இருந்து விலகிய ரஞ்சித்திற்கு எமது வாழ்த்துக்கள்.

டி வி யில் நடக்கும் இந்த மாதிரி மனிதாபினம் அற்ற நிகழ்ச்சிகளை கட்டுபடுத்த தணிக்கை கண்டிப்பாக அவசியம்.

இந்த மாதிரி சுய லாப சிந்தனைகள் விதைக்கப் பட்டாள் பல சத்யம் ராம லிங்க ராஜுக்கள் உருவாகுவார்கள்.

Friday, February 27, 2009

அமைச்சர் பூங்கோதை அருணா - தமிழக சத்யம் ராமலிங்க ராசு

அமைச்சர் பூங்கோதை அருணா - தமிழக சத்யம் ராமலிங்கராசு

சமீபத்தில் மீண்டும் பூங்கோதை அருணாவை அமைச்சர் ஆக்கி உள்ளார் தமிழினத் தலைவர் கலைஞர். அதுவும் முக்கியமான துறையாம் தகவல் தொழில் நுட்பம்.

தி மு க வில் வேறு சட்ட மன்ற உறுப்பினர்களே இல்லையா, ஒருவேளை ஜாதிய அடிப்படை என்றால் கூட வேறு நாடார் உறுப்பினர்களே இல்லையா. பெண் ச ம உ என்றால் கூட சங்கரி நாராயணன் போன்ற மற்ற ச ம உ உள்ளனர்.

பூங்கோதை மீது ஆதாரத்துடன் ஊழல் குற்றம் (தன் உறவினருக்காக பதவியை தவறாக பயன்படுத்திய) உள்ள நிலையில் இப்போது இந்த பதவி நியமனம் தேவையா.
கருப்பசாமி பாண்டியனையோ அல்லது அப்பாவு (நாடார்) போன்றவர்களை நியமித்து இருக்கலாம்.

நாம் எல்லோரும் மதிப்பு வைத்து இருக்கும் கனிமொழி அக்கா இது பற்றி தலைவரிடம் சொல்லி இருக்கலாம்.

கலைஞர் ஏன் தடுமாறுகிறார் என்று தெரிய வில்லை.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ.
தமிழகத்திலும் கூடிய விரைவில் சத்யம் போன்ற நிகழ்வை எதிர் நோக்கலாம்.
வருத்தங்களுடன்
குப்பன்_யாஹூ

Saturday, January 24, 2009

ஆதவன் தீட்சன்யா புலம்பல் -சங்கமம்

ஆதவன் தீட்சன்யா புலம்பல் -சங்கமம்
ஆதவன் தீட்சண்யா ஜூனியர் விகடன்ல ஏன் இந்த புலம்பல் புலம்பி இருக்கார். சங்கமம் கவிதை விழாவில் (தியாகராய அரங்கம், டி நகரில்) சரியாக கவனிக்க வில்லை என்று.
அவரின் உண்மையான புலம்பலா அல்லது ஜூ வி யின் கற்பனை கதையா தெரிய வில்லை.

என் அனுபவத்தில் கனிமொழி அக்கா, தமிழ் மையம் போன்றோர் மிக சிறப்பான முறையிலயே சங்கமம் விழாவை நடத்தி இருந்தனர்.

எனக்கு என்னவோ இது வழக்கம் போல ஜூ வி யின் கற்பனை கதை என்றே தோன்றுகிறது, ஆதவன் இது போல கருத்து சொல்லி இருக்க மாட்டார் என நம்புகிறேன்.

குப்பன்_யாஹூ

Sunday, January 11, 2009

மான் ஆட மயில் ஆட = ரெக்கார்ட் டான்ஸ் - தமிழ் புத்தாண்டு காலை

மான் ஆட மயில் ஆட = ரெக்கார்ட் டான்ஸ் - தமிழ் புத்தாண்டு காலை

கிராமங்களில் ரெகார்ட் டான்ஸ் என்ற பெயரில் அரை குறை ஆடைகளுடன் ஆண் பெண் (அதில் கூட முப்பது வயதிற்கு மேற்பட்டோர்) ஆடுவர். அது சமூகத்தை சீர் கெடுக்கிறது என்று கூறி காவல் துறை அனுமதிக்காது, கைது செய்யும்.

இன்று அந்த ரெக்கார்ட் டான்ஸ் நம் வீட்டு வரவேற்பறை, படுக்கை அறை, படிப்பு அறைகளில், கலைஞர் டி வி மூலமாக ஒளி பரப்ப படுகிறது.

அதுவும் இப்போது போட்டியின் உச்ச கட்டத்தில் இளம் பெண்கள் ஆடைகளை துறக்கவோ, அவிழ்க்கவோ தயக்கமே இல்லாமல் இருக்கின்றனர்.

மாணவர்கள், பதின் வயது விடலைகள் இனிமேல் நயன் தாரா , நமீதா திரைப்படம் தேடி செல்ல வேண்டாம். அதை விட அதிகமாக உடலை, சதையை, உடல வளைவுகளை மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

தமிழ் புத்தாண்டு காலை பத்து மணிக்கு சிறப்பு ரெக்கார்ட் டான்ஸ் ஆம் மன்னிக்கவும் சிறப்பு மான் ஆட மயில் ஆட.

என் வருத்தம் பெரியாரும், அண்ணாவும் இல்லையே இந்த தம்பியின் கலாசார பேணி பார்க்கும் செயலை பார்க்க. அண்ணா பார்த்து இருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்து இருப்பார்.

சில வாரங்களில் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் வேடம் இட்டு ஆடி ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்றனர் எனலாம்.

சில மாதங்களுக்கு முன்னர் கலைஞர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தணிக்கை செய்யும் உரிமையை மாநில அரசுக்கு வழாங்க வேண்டும் என்றார்.
இப்போதுதான் புரிகிறது கலைஞரின் தீர்க்க தரிசனம். இந்த மாதிரி ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சிகளை ஒரு வேலை தடை தணிக்கை செய்து விடுவார்களோ என்ற அச்சம் போல.

கண்டிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை தேவை.

கண்ணகி சிலை போன்ற செட் அமைத்து கண்ணகி முன்னாலேயே காமத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள் கலா குழுவினர்.

பயமாக உள்ளது அடுத்த தலைமுறை எப்படி வருமோ என்று.

குப்பன்_யாஹூ

Friday, January 9, 2009

முரண்பாடு = சாரு நிவேதிதா - இந்தியா டுடே கமல் சிறப்பு இதழ்

முரண்பாடு = சாரு நிவேதிதா - இந்தியா டுடே கமல் சிறப்பு இதழ்
இந்தியா டுடே தமிழ் பதிப்பு கமல் ஹாசன் குறித்த சிறப்பு இதழ் வெளியிட்டு உள்ளது.

அதில் சிறந்த கட்டுரைகள் உள்ளன - எஸ் ராமகிருஷ்ணன், யூகிசேது, ஜெயராம், மனுஷ்ய புத்திரன் , சந்தான பாரதி, நாசர், நிகில் முருகன்.

எல்லாரும் கமலிடம் வைக்கும் ஒரே வேண்டுகோள் உலக அளவிலான தமிழ் திரைப்படம் தொடர்ந்து தர வேண்டும் என்பதே.

சாரு நிவேதிதா தன் கட்டுரையில் கமலுக்கு உலக சினிமா விசயங்கள் நிறைய தெரியும் ஆனால் சிவாஜிக்கு உலக சினிமா மீது ஈடுபாடு இல்லை. எனவே தான் கமல் அளவு சிவாஜி உலக அரங்கில் பேசப் படவில்லை என்கிறார்.

உலக சினிமா தெரிந்த ஒரே உன்னத நடிகர் கமல் மட்டுமே என்று வாக்கியத்துக்கு வாக்கியம் புகழ்ந்து எழுதி உள்ளார்

இதே சாரு நிவேதிதா உயிர்மை இதழில் தசாவதாரம் விமர்சனம் கட்டுரையில் கமல் உலக சினிமாவை தமிழ் திரை உலகில் புகுத்த பார்கிறார். தசாவதாரம் ஒரு குப்பை சினிமா என்று எழுதி இருந்தார்.

அடுத்த மாதம் சுப்ரமணிய புரம் விமர்சனத்தில் சசிகுமார் உலக சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம், தெரிந்தால் கமல் மாத்ரி குழ்ம்பி விடுவார் என்று எழுதி உள்ளார்.

ஆறு மாதத்தில் ஏன் இந்த மாற்றம் சாரு நிவேதிதா.

சாரு கூறும் இன்னொரு விமர்சனம் கமல் இளம் , புதிய , பிரபலம் ஆகாத இயக்குனர்களுடன் சினிமா பண்ணுவது இல்லை என்று.

பிரளயன் உடன் அன்பே சிவம், பரதனை வலுக்கட்டாயாமாக தமிழுக்கு கொண்டு வந்து தேவர் மகன் செய்ய வைத்தது யார்., டி கே ராஜிவ்குமருடன் சாணக்யன் பண்ணியது யார்?
சங்கருடன் அந்நியன் செய்த போது சங்கர் மூன்று படங்களே முடித்து இருந்தார்.

கட்டுரையின் இறுதியில் சாரு நன்றாக பல்டி அடித்து உள்ளார். கமலிடம் மட்டுமே சொல்லும் உரிமை, சுதந்திரம் உண்டு , மற்ற நடிகர்களிடம் சொல்ல முடியாது என்று.

தேவர் சமூக மக்களுடன் நெருங்கி பழ்கியவன் என்ற முறையில் சொல்கிறேன் சாரு, என் பார்வையில் விருமாண்டி (சண்டியர்), தேவர் மகனில் இருந்த புழுதியின் தாக்கம், அருவா வீரம் பருத்தி வீரனில் இல்லை என்பதே உண்மை.
அதிலும் சண்டியரில் (விருமாண்டியில்) அந்த பொட்டி கடை காந்திமதி காட்சிகள் மிக இயல்பான காட்சி (அப்படியே நம் கண் முன்னே, போடி, தேனீ ஊர்களை கண் முன்னே கொண்டு வந்தனர்). சங்கிலி முருகனும், பாரதிராசாவும் அந்த காட்சி பார்த்தும் அழுது விட்டனராம்.
பருத்தி வீரனில் தேவர் படமா குறவர் படமா என்ற குழ்ப்பம் அமீரிடம் நிறையவே இருந்தது. தெரிந்தது.

நாங்களும் சாரு நிவேதிதா என்பதால் இந்த எதிர் விமர்சனத்தை எழுதுகிறோம், இதே அமிதாப் பச்சன் என்றால் எழுத மாட்டோம்.
குப்பன்_யாஹூ

Wednesday, January 7, 2009

சத்யம்- தணிக்கை யாளரும் கூட்டு

சத்யம்- தணிக்கை யாளரும் கூட்டு
சத்யம் நிறுவனத்தின் கால் ஆண்டு, ஆண்டு கணக்குகளில் தாராளமாக மோசடி நடந்து உள்ளதாம். ராமலிங்க ராசு ஒப்புக் கொண்டுள்ளார் இப்பொழுது.
இந்த கணக்குகளை பிரபல தணிக்கை நிறுவனம் ப்ப்ரைஸ் வாட்டர் ஹௌஸ் தணிக்கை செய்து, கணக்குகள் அனைத்தும் உண்மை, உண்மையை தவிர வேறு இல்லை (சத்தியம், சத்தியம், தவிர வேறு இல்லை) என்று சான்று அளித்து உள்ளது.
இந்த நிகழ்வு, ஒரு திருட்டு அல்லது தீவிரவாதத்திற்கு காவலர் துணை போவது போல.
எனவே பதிவர்களே அந்த தணிக்கை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க நாம் அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம்.
மேலும் விபரம் இங்கே காண்க.
http://www.caclubindia.com/forum/messages/2009/1/20528_1st_gtb_now_satyam.asp