skip to main |
skip to sidebar
ராகுலை மடக்கிய சென்னை பெண் நிருபர்
எந்த சானலிலும் தமன்னா, நமீதா பாட்டு இல்லாத தால் என்டிடிவி பார்க்க வேண்டியது ஆகி விட்டது. ராகுல் காந்தி இன்று பத்திரிக்கை நிருபர்களை சென்னையில் சந்தித்த நிகழ்ச்சி நேரடி ஒளி பரப்பு. அதற்கு முதலில் ராகுலுக்கு நன்றிகள்.(ஒளிவு மறைவு இல்லாமல்). ராகுல் யூத் யூத் என்ற வார்த்தையை எல்லா வாக்கியத்திலும் பயன் படுத்தினார். ஒரு பெண் நிருபர் கேட்டார், இளைஞர் இளைஞர் என்கிறீர்களே, ஆந்திராவில் ஏன் ஜெகன் என்ற இளைஞரை முதல்வர் ஆக்க இவ்வளவு யோசனை, தயக்கம்? ராகுல் ஒரு நொடி ஆடித்தான் போய் விட்டார். பின்னர் சுதாரித்து அதை முடிவு செய்ய வேண்டியது நான் அல்ல, கட்சியின் செயற்குழு, பொதுக்குழு என கழக தலைவர்கள் போல பதில் கூறி மழுப்பி விட்டார். இருந்தாலும் ராகுலின் முகத்தில், உடல் மொழியில் தெரிந்தது. அந்த நிருபரின் புத்தி சாலித்தனம், சமயோசித கேள்வி கேட்கும் திறன் குறித்த மகிழ்ச்சி. ராகுல் வாய் திறந்து அந்த பெண் நிருபரை பாராட்ட வில்லையே தவிர அவரது செய்கைகளில் தெரிந்தது. எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் அந்த பெண் நிருபருக்கு, நிருபர் பெயர், எந்த பத்திரிக்கை என்று தெரியவில்லை எனக்கு. கோபம் கொள்ளாது பொறுமையாக சமாளித்த ராகுலுக்கும் பாராட்டுக்கள்.
15 comments:
//ராகுல் ஒரு நொடி ஆடித்தான் போய் விட்டார். பின்னர் சுதாரித்து அதை முடிவு செய்ய வேண்டியது நான் அல்ல, கட்சியின் செயற்குழு, பொதுக்குழு என கழக தலைவர்கள் போல பதில் கூறி மழுப்பி விட்டார்.//
சரிதான்...
//கோபம் கொள்ளாது பொறுமையாக சமாளித்த ராகுலுக்கும் பாராட்டுக்கள்.//
சரிதான்...
அதெப்படி, இப்படி டீப்பா கவனிக்கிறீங்க
எனக்கும் கத்துக்கொடுங்கப்பா...
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து
http://www.srilankacampaign.org/form.htm
அல்லது
http://www.srilankacampaign.org/takeaction.htm
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!
இது போன்ற நிகழ்வுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்,
நிருபரின் புத்திசாலித்தனம்,
ராகுலும் அதைப் புரிந்து கொள்வது
தொடருங்கள்
வாழ்த்துக்கள்
இது போன்ற நிகழ்வுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்,
நிருபரின் புத்திசாலித்தனம்,
ராகுலும் அதைப் புரிந்து கொள்வது
தொடருங்கள்
வாழ்த்துக்கள்
நன்றி அகல் விளக்கு.
தொலைக் காட்சியில் தெளிவாக தெரிந்தது, நீங்களும் பார்த்து இருந்தால் கண்டு கொண்டு இருப்பீர்கள்.
நன்றி தங்கமணி பிரபு
நன்றி நிகழ்காலத்தில்.
அவ்வளவு நுணுக்கமா கவனிச்சிருக்கீங்களே! நன்று.
:)) சில முறை நாம் ரசித்த ஒரு காட்சியை யாரேனும் சிலாகிக்கும் போது, மீண்டும் அதே காட்சி கண் முன் வருமே.. அதே போல ...
இருந்தாலும், ராகுல், ஏனோ மனதுக்குள் ஓரமாய் ஒரு நம்பிக்கை கொடுக்கிறார்...இல்லையா?
-வித்யா
நல்ல பதிவு
ராகுலும் செம யூத் ஏன் இன்னும் பிரதம மந்திரி ஆகவில்லை..எதற்காக காத்து இருக்கிறார்....டிரைனிங்கா????
dear ramji
happy to learn that u r from tirunelveli. the 5c bus travel and perumalpuram college . vow . nice to remember. i found u in dhamayanthys blog and dubukku blog. i'll be happy if u mail me.
dear ramji
happy to learn that u r from tirunelveli. the 5c bus travel and perumalpuram college . vow . nice to remember. i found u in dhamayanthys blog and dubukku blog. i'll be happy if u mail me.
kuppan sir ivlo naala unga site eh enkitte maraichityinkale romba bad sir
any how nalal thinking la potrukinga athilum kurippa orui pen nalaiya prathamarai madakiyathu oru sathanaithaan nandraaga kuripittullerkal
ஹாய் குப்பன் என்ன யாஹூ போறது இல்லையா hariman30
Shubakuttty
Thanks, it is 5E bus.
Could I have your mail id please to mail you.
கலக்கல் பதிவு.... மிக நன்று...... @ http://wp.me/KkRf @ http://yazhuspages.blogspot.com/
Post a Comment