skip to main |
skip to sidebar
எந்த சானலிலும் தமன்னா, நமீதா பாட்டு இல்லாத தால் என்டிடிவி பார்க்க வேண்டியது ஆகி விட்டது. ராகுல் காந்தி இன்று பத்திரிக்கை நிருபர்களை சென்னையில் சந்தித்த நிகழ்ச்சி நேரடி ஒளி பரப்பு. அதற்கு முதலில் ராகுலுக்கு நன்றிகள்.(ஒளிவு மறைவு இல்லாமல்). ராகுல் யூத் யூத் என்ற வார்த்தையை எல்லா வாக்கியத்திலும் பயன் படுத்தினார். ஒரு பெண் நிருபர் கேட்டார், இளைஞர் இளைஞர் என்கிறீர்களே, ஆந்திராவில் ஏன் ஜெகன் என்ற இளைஞரை முதல்வர் ஆக்க இவ்வளவு யோசனை, தயக்கம்? ராகுல் ஒரு நொடி ஆடித்தான் போய் விட்டார். பின்னர் சுதாரித்து அதை முடிவு செய்ய வேண்டியது நான் அல்ல, கட்சியின் செயற்குழு, பொதுக்குழு என கழக தலைவர்கள் போல பதில் கூறி மழுப்பி விட்டார். இருந்தாலும் ராகுலின் முகத்தில், உடல் மொழியில் தெரிந்தது. அந்த நிருபரின் புத்தி சாலித்தனம், சமயோசித கேள்வி கேட்கும் திறன் குறித்த மகிழ்ச்சி. ராகுல் வாய் திறந்து அந்த பெண் நிருபரை பாராட்ட வில்லையே தவிர அவரது செய்கைகளில் தெரிந்தது. எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் அந்த பெண் நிருபருக்கு, நிருபர் பெயர், எந்த பத்திரிக்கை என்று தெரியவில்லை எனக்கு. கோபம் கொள்ளாது பொறுமையாக சமாளித்த ராகுலுக்கும் பாராட்டுக்கள்.