Friday, May 8, 2009

ஒபாமா இன் பர்கர் ஷாப்- வாழும் மகாத்மா.

சமீபத்தில் பரக் ஒபாமா ஒரு சிறிய பர்கர் கடைக்கு சென்று மதிய உணவு உண்டார். பார்ப்பதற்கு ஒரு விளம்பர நிகழ்ச்சி போன்று முதலில் தோன்றினாலும், சற்று நேரம் கழித்து யோசிக்கையில், எவ்வளவு பெரிய விஷயம், அர்த்தம் உள்ளது என்று புரிகிறது. எவ்வளவு உயர்ந்த பதவியில் உள்ள நபர் எவ்வளவு எளிமையாக இயல்பாக , ஒரு சாதரண குடிமகன் போல நடந்து கொள்கிறார். அவரின் பேச்சுக்களில், செயல்களில், நடத்தையில் எந்த வித செயற்கை தனமும் இல்லை. ஒரு பஞ்சாயத்தின் வார்டு கவுன்சிலர் கூட நாலு ஸ்கார்பிஒ உடன் வந்து இறங்கி பந்தா பண்ணும் ஊரில் (நாட்டில்) இருக்கும் எனக்கு, ஒபாமாவின் இந்த செயல் மிகுந்த ஆச்சர்யம், நம்பிக்கை, உந்துதலை கொடுத்தது எனலாம். பதவியோ, அதிகாரமோ தன்னுடைய இயல்பை எப்போதும் மாற்றாது என்பதே அவர் உலகிற்கு அறிவிக்கும் செய்தி போல. பள்ளிகூட வரலாற்று புத்தகத்தில் தான் படித்து இருக்கிறேன், காந்தி என்ற மகான் எளிமையாக வாழ்ந்தார் என்று, இன்று என் வாழ் நாளில் இன்னொரு காந்தியை (மகானை) பார்க்கும் வாய்ப்பு கிட்டியது என சொல்வேன். வாழ்க நீ எம்மான், வாழ்க பல்லாண்டு.

8 comments:

Anonymous said...

enna uLaral ithu??

Tech Shankar said...

எனக்காக அந்த மாதிரியான கஷ்டப்படுபவர்களின் படங்களைத் தாருங்கள். நான் உங்களுக்கு நன்றி கார்டு போட்டு அந்தப் படங்களையும் போடுகிறேன். நன்றி.

please mail me that kind of photos to tamilnenjam@gmail.com

Thank you for your co-operation


//அபுதாபி, துபாயில் ஒரு அறையில் எட்டு அல்லது பத்து தமிழர்கள், இந்தியர்கள்; தங்கி ஒரே குளியல் அரை, கழிவு அரை பயன்[படுத்தும் படத்தை போடுங்கள்.

அதுதான் உண்மையான அக்கறை.

இப்படி நிங்களும் அந்த ஏமாற்று ஏஜென்ட்டுகள் மாத்ரி இருகதீர்கள், நம் தமிழ் நண்பர்களுக்கு த்ரோகம் செய்யாதீர்கள்.

ஒன்றே செய்வோம், நன்றே செய்வோம்.

குப்பன்_யாஹூ

அப்படித் துரோகம் செய்யும் எண்ணம் எனக்கில்லை அன்பரே. அப்படி நீங்கள் கருதாதீர்கள். என்னால் உங்கள் மனம் புண்பட்டிருப்பின் மன்னிக்கவும்.


//இப்படி நிங்களும் அந்த ஏமாற்று ஏஜென்ட்டுகள் மாத்ரி இருகதீர்கள், நம் தமிழ் நண்பர்களுக்கு த்ரோகம் செய்யாதீர்கள்.

முதலில் தமிழை ஒழுங்காக எழுதக் கற்றுக்கொள்ளவும். பிறகு அடுத்தவர் தவறைத் திருத்தவும்.


//இப்படி நிங்களும் அந்த ஏமாற்று ஏஜென்ட்டுகள் மாத்ரி இருகதீர்கள், நம் தமிழ் நண்பர்களுக்கு த்ரோகம் செய்யாதீர்கள்.

குப்பன்.யாஹூ said...

Thanks for the visit Tamilina karuppi, anony.

sharepoint
மன்னிக்கவும், என் அக்கறை, இந்தியாவை தாண்டாத தமிழர்களுக்கு அரபு நாடுகள், சிங்கபூர் போன்ற நாடுகளில் உள்ள உண்மையான வாழ்க்கை நிலை அறிய வேண்டும் என்ற அக்கறை தானே, தவிர வேறு ஒன்றும் இல்லை.

தவறுதலான புரிதலுக்கு அல்லது என் எழுத்திற்கு வருத்தங்கள்.

எனவே யதார்த்த நிலை புகைபடங்களை போடுவோம், என்னிடம் அந்த புகை படங்கள் இல்லை, கிடைத்தால் தருகிறேன் கண்டிப்பாக.

குப்பன்_யாஹூ

Tech Shankar said...

கண்டிப்பா போடுவோம். உங்களிடம் அந்தப் படங்கள் கிடைத்தால் - உடனே tamilnenjam@gmail.com க்கு மெயிலிடுங்கள். உடனே பதிவிட்டுவிடுகிறேன். நன்றி


//எனவே யதார்த்த நிலை புகைபடங்களை போடுவோம், என்னிடம் அந்த புகை படங்கள் இல்லை, கிடைத்தால் தருகிறேன் கண்டிப்பாக.

குப்பன்_யாஹூ

ஆதவா said...

பல இடங்களில் நிகழ்வுகளில் இந்தமாதிரி வித்தியாசம் காணலாம்... இங்கே பணம்தானே பெரியதாக இருக்கிறது.. எளிமைக்கு என்ன விலை என்று அல்லவா கேட்கிறார்கள்!!!

ஆதவா said...

ஒரு இணைப்பின் மூலம் இங்கே வந்தேன். உங்களைப் பின் தொடர்ந்து வருகிறேன்!!! நன்றி என் தளம் வந்து பதிவிட்டமைக்கு!!!

Muruganandan M.K. said...

ஆமாம். பதவி வரும்போதும் எளிமையாகவும் இயல்பாகவும் வாழ்வது மிகச் சிலரே.
இன்றுதான் உங்கள் பதிவு கண்டேன். நன்றாக இருக்கிறது. தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்க்ள்.

Anonymous said...

If Rahul Gandhi eats in road side restaurant, you will criticize.. if the same thing happened in US... you will appreciate...

This is REAL ARYAN MENTALITY...