skip to main |
skip to sidebar
ஆர்குட், வலைபதிவுகள், சாட் அறைகள் என எல்லா இடங்களிலும் காங்கிரஸ் திமுக கூட்டணியை தோற்கடிக்க எழுத்து வடிவில் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது. ஆனால் நிஜ வாழ்வில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று உள்ளது. எனவே ஆர்குட், பதிவுலகம் அந்த அளவு பாதிப்பு ஏற்படுத்த முடிய வில்லை என்பது புரிகிறது. ஒரு காரணம் இணயம் பயன்படுத்தும் பெரும்பாலான தமிழர்கள் வெளி நாட்டில் வசிப்பது (தொண்ணூறு சத விகிதம்). அதிமுக கூட்டணியை தான் குறை சொல்ல வேண்டும், இந்திய பிரச்சனைகளான ஸ்பெக்ட்ரம் ஊழல், அணு ஆயுத ஒப்பந்தம், மின் வெட்டு, தீவிரவாதம் இவற்றை மக்களிடம் எடுத்து செல்லாமல் இலங்கை தமிழ் ஈழம் மட்டுமே பிரதானம் என்று இருந்தது. வலைப் பதிவுகள் எல்லா மக்களிடமும் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்
சமீபத்தில் பரக் ஒபாமா ஒரு சிறிய பர்கர் கடைக்கு சென்று மதிய உணவு உண்டார். பார்ப்பதற்கு ஒரு விளம்பர நிகழ்ச்சி போன்று முதலில் தோன்றினாலும், சற்று நேரம் கழித்து யோசிக்கையில், எவ்வளவு பெரிய விஷயம், அர்த்தம் உள்ளது என்று புரிகிறது. எவ்வளவு உயர்ந்த பதவியில் உள்ள நபர் எவ்வளவு எளிமையாக இயல்பாக , ஒரு சாதரண குடிமகன் போல நடந்து கொள்கிறார். அவரின் பேச்சுக்களில், செயல்களில், நடத்தையில் எந்த வித செயற்கை தனமும் இல்லை. ஒரு பஞ்சாயத்தின் வார்டு கவுன்சிலர் கூட நாலு ஸ்கார்பிஒ உடன் வந்து இறங்கி பந்தா பண்ணும் ஊரில் (நாட்டில்) இருக்கும் எனக்கு, ஒபாமாவின் இந்த செயல் மிகுந்த ஆச்சர்யம், நம்பிக்கை, உந்துதலை கொடுத்தது எனலாம். பதவியோ, அதிகாரமோ தன்னுடைய இயல்பை எப்போதும் மாற்றாது என்பதே அவர் உலகிற்கு அறிவிக்கும் செய்தி போல. பள்ளிகூட வரலாற்று புத்தகத்தில் தான் படித்து இருக்கிறேன், காந்தி என்ற மகான் எளிமையாக வாழ்ந்தார் என்று, இன்று என் வாழ் நாளில் இன்னொரு காந்தியை (மகானை) பார்க்கும் வாய்ப்பு கிட்டியது என சொல்வேன். வாழ்க நீ எம்மான், வாழ்க பல்லாண்டு.