Friday, February 27, 2009

அமைச்சர் பூங்கோதை அருணா - தமிழக சத்யம் ராமலிங்க ராசு

அமைச்சர் பூங்கோதை அருணா - தமிழக சத்யம் ராமலிங்கராசு

சமீபத்தில் மீண்டும் பூங்கோதை அருணாவை அமைச்சர் ஆக்கி உள்ளார் தமிழினத் தலைவர் கலைஞர். அதுவும் முக்கியமான துறையாம் தகவல் தொழில் நுட்பம்.

தி மு க வில் வேறு சட்ட மன்ற உறுப்பினர்களே இல்லையா, ஒருவேளை ஜாதிய அடிப்படை என்றால் கூட வேறு நாடார் உறுப்பினர்களே இல்லையா. பெண் ச ம உ என்றால் கூட சங்கரி நாராயணன் போன்ற மற்ற ச ம உ உள்ளனர்.

பூங்கோதை மீது ஆதாரத்துடன் ஊழல் குற்றம் (தன் உறவினருக்காக பதவியை தவறாக பயன்படுத்திய) உள்ள நிலையில் இப்போது இந்த பதவி நியமனம் தேவையா.
கருப்பசாமி பாண்டியனையோ அல்லது அப்பாவு (நாடார்) போன்றவர்களை நியமித்து இருக்கலாம்.

நாம் எல்லோரும் மதிப்பு வைத்து இருக்கும் கனிமொழி அக்கா இது பற்றி தலைவரிடம் சொல்லி இருக்கலாம்.

கலைஞர் ஏன் தடுமாறுகிறார் என்று தெரிய வில்லை.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ.
தமிழகத்திலும் கூடிய விரைவில் சத்யம் போன்ற நிகழ்வை எதிர் நோக்கலாம்.
வருத்தங்களுடன்
குப்பன்_யாஹூ

Saturday, January 24, 2009

ஆதவன் தீட்சன்யா புலம்பல் -சங்கமம்

ஆதவன் தீட்சன்யா புலம்பல் -சங்கமம்
ஆதவன் தீட்சண்யா ஜூனியர் விகடன்ல ஏன் இந்த புலம்பல் புலம்பி இருக்கார். சங்கமம் கவிதை விழாவில் (தியாகராய அரங்கம், டி நகரில்) சரியாக கவனிக்க வில்லை என்று.
அவரின் உண்மையான புலம்பலா அல்லது ஜூ வி யின் கற்பனை கதையா தெரிய வில்லை.

என் அனுபவத்தில் கனிமொழி அக்கா, தமிழ் மையம் போன்றோர் மிக சிறப்பான முறையிலயே சங்கமம் விழாவை நடத்தி இருந்தனர்.

எனக்கு என்னவோ இது வழக்கம் போல ஜூ வி யின் கற்பனை கதை என்றே தோன்றுகிறது, ஆதவன் இது போல கருத்து சொல்லி இருக்க மாட்டார் என நம்புகிறேன்.

குப்பன்_யாஹூ

Sunday, January 11, 2009

மான் ஆட மயில் ஆட = ரெக்கார்ட் டான்ஸ் - தமிழ் புத்தாண்டு காலை

மான் ஆட மயில் ஆட = ரெக்கார்ட் டான்ஸ் - தமிழ் புத்தாண்டு காலை

கிராமங்களில் ரெகார்ட் டான்ஸ் என்ற பெயரில் அரை குறை ஆடைகளுடன் ஆண் பெண் (அதில் கூட முப்பது வயதிற்கு மேற்பட்டோர்) ஆடுவர். அது சமூகத்தை சீர் கெடுக்கிறது என்று கூறி காவல் துறை அனுமதிக்காது, கைது செய்யும்.

இன்று அந்த ரெக்கார்ட் டான்ஸ் நம் வீட்டு வரவேற்பறை, படுக்கை அறை, படிப்பு அறைகளில், கலைஞர் டி வி மூலமாக ஒளி பரப்ப படுகிறது.

அதுவும் இப்போது போட்டியின் உச்ச கட்டத்தில் இளம் பெண்கள் ஆடைகளை துறக்கவோ, அவிழ்க்கவோ தயக்கமே இல்லாமல் இருக்கின்றனர்.

மாணவர்கள், பதின் வயது விடலைகள் இனிமேல் நயன் தாரா , நமீதா திரைப்படம் தேடி செல்ல வேண்டாம். அதை விட அதிகமாக உடலை, சதையை, உடல வளைவுகளை மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

தமிழ் புத்தாண்டு காலை பத்து மணிக்கு சிறப்பு ரெக்கார்ட் டான்ஸ் ஆம் மன்னிக்கவும் சிறப்பு மான் ஆட மயில் ஆட.

என் வருத்தம் பெரியாரும், அண்ணாவும் இல்லையே இந்த தம்பியின் கலாசார பேணி பார்க்கும் செயலை பார்க்க. அண்ணா பார்த்து இருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்து இருப்பார்.

சில வாரங்களில் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் வேடம் இட்டு ஆடி ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்றனர் எனலாம்.

சில மாதங்களுக்கு முன்னர் கலைஞர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தணிக்கை செய்யும் உரிமையை மாநில அரசுக்கு வழாங்க வேண்டும் என்றார்.
இப்போதுதான் புரிகிறது கலைஞரின் தீர்க்க தரிசனம். இந்த மாதிரி ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சிகளை ஒரு வேலை தடை தணிக்கை செய்து விடுவார்களோ என்ற அச்சம் போல.

கண்டிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை தேவை.

கண்ணகி சிலை போன்ற செட் அமைத்து கண்ணகி முன்னாலேயே காமத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள் கலா குழுவினர்.

பயமாக உள்ளது அடுத்த தலைமுறை எப்படி வருமோ என்று.

குப்பன்_யாஹூ

Friday, January 9, 2009

முரண்பாடு = சாரு நிவேதிதா - இந்தியா டுடே கமல் சிறப்பு இதழ்

முரண்பாடு = சாரு நிவேதிதா - இந்தியா டுடே கமல் சிறப்பு இதழ்
இந்தியா டுடே தமிழ் பதிப்பு கமல் ஹாசன் குறித்த சிறப்பு இதழ் வெளியிட்டு உள்ளது.

அதில் சிறந்த கட்டுரைகள் உள்ளன - எஸ் ராமகிருஷ்ணன், யூகிசேது, ஜெயராம், மனுஷ்ய புத்திரன் , சந்தான பாரதி, நாசர், நிகில் முருகன்.

எல்லாரும் கமலிடம் வைக்கும் ஒரே வேண்டுகோள் உலக அளவிலான தமிழ் திரைப்படம் தொடர்ந்து தர வேண்டும் என்பதே.

சாரு நிவேதிதா தன் கட்டுரையில் கமலுக்கு உலக சினிமா விசயங்கள் நிறைய தெரியும் ஆனால் சிவாஜிக்கு உலக சினிமா மீது ஈடுபாடு இல்லை. எனவே தான் கமல் அளவு சிவாஜி உலக அரங்கில் பேசப் படவில்லை என்கிறார்.

உலக சினிமா தெரிந்த ஒரே உன்னத நடிகர் கமல் மட்டுமே என்று வாக்கியத்துக்கு வாக்கியம் புகழ்ந்து எழுதி உள்ளார்

இதே சாரு நிவேதிதா உயிர்மை இதழில் தசாவதாரம் விமர்சனம் கட்டுரையில் கமல் உலக சினிமாவை தமிழ் திரை உலகில் புகுத்த பார்கிறார். தசாவதாரம் ஒரு குப்பை சினிமா என்று எழுதி இருந்தார்.

அடுத்த மாதம் சுப்ரமணிய புரம் விமர்சனத்தில் சசிகுமார் உலக சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம், தெரிந்தால் கமல் மாத்ரி குழ்ம்பி விடுவார் என்று எழுதி உள்ளார்.

ஆறு மாதத்தில் ஏன் இந்த மாற்றம் சாரு நிவேதிதா.

சாரு கூறும் இன்னொரு விமர்சனம் கமல் இளம் , புதிய , பிரபலம் ஆகாத இயக்குனர்களுடன் சினிமா பண்ணுவது இல்லை என்று.

பிரளயன் உடன் அன்பே சிவம், பரதனை வலுக்கட்டாயாமாக தமிழுக்கு கொண்டு வந்து தேவர் மகன் செய்ய வைத்தது யார்., டி கே ராஜிவ்குமருடன் சாணக்யன் பண்ணியது யார்?
சங்கருடன் அந்நியன் செய்த போது சங்கர் மூன்று படங்களே முடித்து இருந்தார்.

கட்டுரையின் இறுதியில் சாரு நன்றாக பல்டி அடித்து உள்ளார். கமலிடம் மட்டுமே சொல்லும் உரிமை, சுதந்திரம் உண்டு , மற்ற நடிகர்களிடம் சொல்ல முடியாது என்று.

தேவர் சமூக மக்களுடன் நெருங்கி பழ்கியவன் என்ற முறையில் சொல்கிறேன் சாரு, என் பார்வையில் விருமாண்டி (சண்டியர்), தேவர் மகனில் இருந்த புழுதியின் தாக்கம், அருவா வீரம் பருத்தி வீரனில் இல்லை என்பதே உண்மை.
அதிலும் சண்டியரில் (விருமாண்டியில்) அந்த பொட்டி கடை காந்திமதி காட்சிகள் மிக இயல்பான காட்சி (அப்படியே நம் கண் முன்னே, போடி, தேனீ ஊர்களை கண் முன்னே கொண்டு வந்தனர்). சங்கிலி முருகனும், பாரதிராசாவும் அந்த காட்சி பார்த்தும் அழுது விட்டனராம்.
பருத்தி வீரனில் தேவர் படமா குறவர் படமா என்ற குழ்ப்பம் அமீரிடம் நிறையவே இருந்தது. தெரிந்தது.

நாங்களும் சாரு நிவேதிதா என்பதால் இந்த எதிர் விமர்சனத்தை எழுதுகிறோம், இதே அமிதாப் பச்சன் என்றால் எழுத மாட்டோம்.
குப்பன்_யாஹூ

Wednesday, January 7, 2009

சத்யம்- தணிக்கை யாளரும் கூட்டு

சத்யம்- தணிக்கை யாளரும் கூட்டு
சத்யம் நிறுவனத்தின் கால் ஆண்டு, ஆண்டு கணக்குகளில் தாராளமாக மோசடி நடந்து உள்ளதாம். ராமலிங்க ராசு ஒப்புக் கொண்டுள்ளார் இப்பொழுது.
இந்த கணக்குகளை பிரபல தணிக்கை நிறுவனம் ப்ப்ரைஸ் வாட்டர் ஹௌஸ் தணிக்கை செய்து, கணக்குகள் அனைத்தும் உண்மை, உண்மையை தவிர வேறு இல்லை (சத்தியம், சத்தியம், தவிர வேறு இல்லை) என்று சான்று அளித்து உள்ளது.
இந்த நிகழ்வு, ஒரு திருட்டு அல்லது தீவிரவாதத்திற்கு காவலர் துணை போவது போல.
எனவே பதிவர்களே அந்த தணிக்கை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க நாம் அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம்.
மேலும் விபரம் இங்கே காண்க.
http://www.caclubindia.com/forum/messages/2009/1/20528_1st_gtb_now_satyam.asp

Thursday, November 27, 2008

கடல் புரத்தில் - வண்ண நிலவன்

கடல் புரத்தில் - வண்ண நிலவன்

புத்தகத்தை அளித்த கிழ்க்கு பதிப்பகம், ஹரன் பிரசன்னாவிற்கு நன்றிகள். ஏற்கனவே பதிவர் லேகா இந்த புத்தகம் குறித்து எழுதிய அருமையான விமர்சனம் படித்து இருந்ததால் அதிக எதிர்பார்ப்புடன் படிக்க தொடங்கினேன்.(என் விமர்சனத்தை விட லேகாவின் விமர்சனம் சிறந்ததாக இருக்கும்- http://yalisai.blogspot.com/2008/07/blog-post_22.html).
எதிர்பார்ப்புகள் வீண் போக வில்லை. என் மனதில் உள்ள எதிர்ப்பார்ப்புகளை விட நூறு மடங்கு மிக சிறப்பாக எழுதி இருக்கிறார் வண்ண நிலவன். நன்றிகள் பல வண்ண நிலவன் அவர்களே.

அப்படியே வாசிப்பவர்களை உவரி, உடன்குடி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம், வீரபாண்டியன் பட்டணம், திருசெந்தூர், புன்னக்காயல், தூத்துக்குடி, நாசரேத், இடிந்தகரை, ஊருக்கே தூக்கி கொண்டு போய் விடுகிறார்.என் உயர் பள்ளி கல்வியை ஆத்தூரில் படித்ததால் மீனவ நண்பர்கள் அதிகம் (அருகில்தான் புன்னக்காயல், பழையகாயல்).

கதையில் வரும் பிலோமி என் அக்காவுடன் படித்த புன்னக்காயல் சகாயராணி அக்காவை நினைவு படுத்தி கொண்டே இருந்தார். (இந்த பதிவு எழுதும் போது கூட கண்ணீர் மல்குகிறது).

பிலோமியின் அண்ணன் ஸெபஸ்தி, என்னுடன் படித்த டெய்சி செல்வராணி யின் அண்ணன் தாமஸ் பெர்னாண்டோவை நினவு படுத்தினார். கதையை இரவு படித்து விட்டு (பத்து மணி இருக்கும்) படுக்கையில் படித்தால் தூக்கமே வர வில்லை இரண்டு மணி நேரத்திற்கு.நினவு அலைகள் எங்கு எங்கோ சென்றன.

இது உண்மை கதையா அல்லது கற்பனை கதையா என்று பட்டி மன்றமே நடத்தலாம். வண்ண நிலவன் அந்த அளவு சிறப்பாக எழுதி உள்ளார்.
மீன் பரவர்கள் மேல் எப்போதுமே எனக்கு, என் குடுமபத்தார்க்கு மிகுந்த அன்பு, மரியாதை உண்டு., அடி மனதில் ஒற்றுமை, பரந்த மனப்பான்மை, அடுத்தவர் முன்னேறுவது கண்டு ஆனந்த படுதல் போன்ற நல்ல குணங்கள் உள்ள மனிதர்கள்.

கதையின் போக்கு , கதை முடிவு குறித்து நான் எழுத விரும்ப வில்லை, படிப்பவர்களுக்கு பிலோமியின் காதல் முடிவு என்ன ஆகும் என்ற பரபரப்பு இருக்கட்டும் என்பது என் ஆசை.

சிறந்த வரிகள் பல இருக்கின்றன:"தூரத்திலே கடல் இரைகிறது. யாரோ ஒரு பெண் தன் பாடுகள் தீராமல் புலம்பி கொண்டிருக்கிறது போல கேட்டது."
முதலில் குறிக்க தொடங்கினேன்., எழுத்து என்னை விழுங்கத் தொடங்கியதும் குறிப்பதை நிறுத்தி விட்டேன்.

பிலோமி ரஞ்சி யின் உரையாடல்கள் மிக அருமை. ஐசக், பவுலு, சாமிதாஸ் போன்றோர் எல்லா கடல் புறத்து கிராமங்களிலும் இருக்கின்றனர்.
இந்த கதை தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோயில் கடல் புறத்தில் நடந்தது போல இருந்தாலும் , இவை போன்ற நிகழ்வுகள் எல்லா கடலோர மாவட்டங்களிலும் நடப்பவை.

ஒரு நல்ல தமிழ் சினிமா (மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, வெயில், பாசமலர், பராசக்தி, anjali ) மனதில் ஏற்படுத்திய தொந்தரவை வண்ண நிலவன் ஏற்படுத்தி உள்ளார். திரைப்படங்களுடன் புத்தகங்களை ஒப்பீடு செய்தல் தவறுதான், மற்ற புத்தகங்களோடு ஒப்பீடு செய்து வீண் வம்புகள் உருவாக்க வேண்டாம் என்று கருதுவதால் என்னை மன்னிப்பீர்களாக

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்களேன்.

Saturday, November 22, 2008

சன் டி வி, தினகரனால் தான் திமுக ஆட்சி - காமெடி

சன் டி வி, தினகரனால் தான் திமுக ஆட்சி - காமெடி

மாறன் சகோதரரக்ள் அறிக்கை, கடிதம் படித்தால் சிரிப்பை தவிர வேறு ஒன்றும் வராது. கலாநிதி சொல்கிறார், திமுக ஆட்சியே சண் டி வி , தினகரன் (பழைய கே பி கந்தசாமி அய்யா தினகரன் அல்ல) ஆகியவற்றால் தான் கிடைத்ததாம். ஆனால் கலைஞர்க்கு நன்றி கடன் இல்லையாம், தயாநிதி மாறனை பதவியை விட்டு தூக்கி விட்டாராம்.

திமுக வில் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத தயாநிதி மாறனுக்கு எம் பி தகுதி எங்கிருந்து வந்தது. கலைஞரின் பேரனாக இல்லாவிடில், ஒரு திமுக வட்ட பிரதிநிதி, தயாநிதிக்காக தேர்தலில் உழைதிருப்பாரா.

பொதுக்குழு, செயற்குழு, ஒன்றிய கழக தேர்தல் இது பற்றி எல்லாம் ஏதும் தெர்யுமா தயாநிதிக்கும், கலாநிதிக்கும்.

காலம் சென்ற முரசொலி மாறனுக்கே தெரியாதே அந்த அளவு. எத்தனை பொதுக்குழு கூட்டங்கள், மாநாடுகளில் மாறன் பேசும் பொது, உடன்பிறப்புகள் எந்த அளவு புலம்பி நொந்து போவார்கள் என்பது நாடு அறிந்த செய்தி.

கலைஞரின் உறவினர் என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்தே முரசொலி மாறனுக்கு மந்திரி பதவி தரப் பட்டது, (விடுதலை விரும்பி, வைகோ, முகமது சகி, எல் கணேசன், குப்புசாமி, மிசா கணேசன், போன்றோர் எல்லாம் இருந்த போதும்)

உண்மையாக கட்சிக்கு உழைத்த தொண்டர்களை விட்டு விட்டு, உறவை பார்த்து பதவி வழஅங்கியது கலைஞர் செய்த மிகப் பெரிய தப்பு, அதற்கான தண்டனை இப்போது கிடைத்து விட்டது.

இங்கே பேராசிரியரின் அனுபவத்தை, பண்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும், அவர்தான் கலைஞரிடம் சொன்னாரம், ஏதோ சின்ன பசங்க,செங்கல்பட்ட தாண்டி தமிழ்நாடுன்னா என்ன என்று தெரியாத பசங்க, பாவம் விட்ருங்க.