நேற்று மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சி இறுதி நிகழ்ச்சி நடந்தது. அதில் நடனம் ஆடிய பத்து பாடல்களில் எட்டு பாடல்கள் ஆங்கில பாப் பாடல்கள். இதுதான் கழகத்தின் தமிழ் பற்றா.
நல்ல வேளை அண்ணா நீங்கள் உயிரோடு இல்லை, இந்த ஆட்டங்களை பார்த்திருந்தால் காங்கிரசிலேயே போய் சேர்ந்து இருப்பீர்கள்.
இனமான பேராசிரியர் எப்படித்தான் இதை பொறுத்து கொண்டு இருக்கிறாரோ, வாழ்க நீர் எம்மான்.
இதுவரை விடலைகளின் ரிகார்ட் டான்ஸ் நடந்தது. அடுத்து மான் ஆட மயில் ஆல் மூன்றாம் பாகம் நிகழ்ச்சி ஆரம்பம், அதில் சிறு குழ்ந்தைகளின் அரைகுறை உடை நடனம் அரங்கேறப் போகிறதாம்.
அங்கே தொப்புள் கொடி உறவை சிங்கள இராணுவம் கொன்று குவிக்கிறது, இங்கே நாம் தொப்புளை யார் அழகாக சின்ன திரையில் காட்டுவது என்பதில் போட்டி நடத்துவோம். வாழ்க நம் தமிழ் பற்று, தமிழ் சேவை.
Showing posts with label தொப்புள் கோடி uravu. Show all posts
Showing posts with label தொப்புள் கோடி uravu. Show all posts
Sunday, October 26, 2008
Subscribe to:
Posts (Atom)
