Sunday, January 11, 2009

மான் ஆட மயில் ஆட = ரெக்கார்ட் டான்ஸ் - தமிழ் புத்தாண்டு காலை

மான் ஆட மயில் ஆட = ரெக்கார்ட் டான்ஸ் - தமிழ் புத்தாண்டு காலை

கிராமங்களில் ரெகார்ட் டான்ஸ் என்ற பெயரில் அரை குறை ஆடைகளுடன் ஆண் பெண் (அதில் கூட முப்பது வயதிற்கு மேற்பட்டோர்) ஆடுவர். அது சமூகத்தை சீர் கெடுக்கிறது என்று கூறி காவல் துறை அனுமதிக்காது, கைது செய்யும்.

இன்று அந்த ரெக்கார்ட் டான்ஸ் நம் வீட்டு வரவேற்பறை, படுக்கை அறை, படிப்பு அறைகளில், கலைஞர் டி வி மூலமாக ஒளி பரப்ப படுகிறது.

அதுவும் இப்போது போட்டியின் உச்ச கட்டத்தில் இளம் பெண்கள் ஆடைகளை துறக்கவோ, அவிழ்க்கவோ தயக்கமே இல்லாமல் இருக்கின்றனர்.

மாணவர்கள், பதின் வயது விடலைகள் இனிமேல் நயன் தாரா , நமீதா திரைப்படம் தேடி செல்ல வேண்டாம். அதை விட அதிகமாக உடலை, சதையை, உடல வளைவுகளை மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

தமிழ் புத்தாண்டு காலை பத்து மணிக்கு சிறப்பு ரெக்கார்ட் டான்ஸ் ஆம் மன்னிக்கவும் சிறப்பு மான் ஆட மயில் ஆட.

என் வருத்தம் பெரியாரும், அண்ணாவும் இல்லையே இந்த தம்பியின் கலாசார பேணி பார்க்கும் செயலை பார்க்க. அண்ணா பார்த்து இருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்து இருப்பார்.

சில வாரங்களில் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் வேடம் இட்டு ஆடி ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்றனர் எனலாம்.

சில மாதங்களுக்கு முன்னர் கலைஞர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தணிக்கை செய்யும் உரிமையை மாநில அரசுக்கு வழாங்க வேண்டும் என்றார்.
இப்போதுதான் புரிகிறது கலைஞரின் தீர்க்க தரிசனம். இந்த மாதிரி ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சிகளை ஒரு வேலை தடை தணிக்கை செய்து விடுவார்களோ என்ற அச்சம் போல.

கண்டிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை தேவை.

கண்ணகி சிலை போன்ற செட் அமைத்து கண்ணகி முன்னாலேயே காமத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள் கலா குழுவினர்.

பயமாக உள்ளது அடுத்த தலைமுறை எப்படி வருமோ என்று.

குப்பன்_யாஹூ

9 comments:

  1. ஆமா பாஸ் , கலா சமூகத்தை கெடுக்கிறா.

    ReplyDelete
  2. yes you are right. This is an idiotic TV programme.

    ReplyDelete
  3. சண் டி வி இன்னும் மோசம்.
    சண் டி வி ஆபாசத்தை வைத்தே பணம் பண்ணுகிறது

    ReplyDelete
  4. தமிழ் பேரை சொல்லி மக்களை ஏமாத்தி வரும் நம் அரசியல்வாதிகள் தொடங்கும் தொலைக்காட்சி சேனல்களில் தமிழின் நிலைமை இது தான்.

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வது போல அந்த நிகழச்சியில் எந்த ஆபாசமும் தெரியவில்லையே? நிகழ்ச்சி நன்றாகத்தான் உள்ளது. எனது கண்களுக்கு ஆபாசமாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  6. குப்பன் சார் Jan 10th புத்தக சந்தை சென்றேன். எஸ்ரா அவர்களை பார்த்தேன், இரண்டொரு வார்த்தைகள் பேசினேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
    மனுஷ்யபுத்ரனும் இருந்தார். கோபியின் உள்ளிருந்து சில குரல்கள் வம்சி புக்ஸ்-யில் வாங்கினேன். வாங்கினா பிற புத்தகங்கள் - எஸ்ரா-வின் காற்றில் யாரோ நடகிறார்கள், சாரு-வின் கடவுளும் நானும், கிருஷ்ணபருந்து, ரத்த உறவு, மஹாராஜாவின் ரயில் வண்டி, ஜெமோ-வின் எதிர்முகம், சாரு-வின் ஏஷிஸ்தெந்திஅலிஸ்ம்-um Fancy Banianum. எஸ்ரா மிக்க அன்புடன் புத்தகத்தில் கையொப்பம் இட்டார்.

    ReplyDelete
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. Off Topic:
    Don't miss Cho's speech on Annual Day to be telecast in Jaya TV: Saturday, 17th Jan at 11AM

    ReplyDelete
  9. ராம்ஜி நல்லா காரமாகவே சாடியிருக்ரீர்கள் உண்மையை சொல்ல எல்லோருமே பயபடுவார்கள். நான் வெறுக்கும் பல பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் மானாட மயிலாட நிகழ்ச்சியும் ஒன்று

    ReplyDelete